இந்த வலைப்பதிவில் தேடு

PGTRB தேர்வு விவரங்கள் வெளியீடு : தேர்வு வாரியம் அறிவிப்பு

புதன், 25 செப்டம்பர், 2019




நாளை மறுநாள் நடக்க உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுதொடர்பான விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி 30 மாவட்டங்களில் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. தேர்வு மையங்கள் 154. தேர்வுகள் காலை மாலை என 6கட்டமாக நடக்கிறது. மொத்தம் 17 பாடத் தலைப்புகளுக்கு தேர்வு நடக்கிறது. 1 லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுதுகின்றனர்.


மாவட்டங்களில் 30 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத இயலாத நிலையில் உள்ள பட்டதாரிகளுக்கு 653 சொல்வதை எழுதுவோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 3389 பேர். பெண்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 80 பேர், ஆண்கள் 63 ஆயிரத்து 375 பேர். மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர். தாவரவியல் பாடத் தேர்வில் 7392, வேதியியல் பாடத் தேர்வில் 14510, வணிகவியல் 14884, ஆங்கிலம் 32403, வரலாறு 13687, கணக்கு 32867, உடற்கல்வி 2713, இயற்பியல் 14380, தமிழ் 33752, விலங்கியல் 9694 பேர் உள்ளிட்ட 1 லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent