இதன்படி, வங்கிக் கணக்கில் இருப்பு வைத்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறுவகைகளில் சர்வீஸ் கட்டணம் மாறப்போகிறது.
1. நகர்புறங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் வங்கிக்கணக்கில் மாதம் குறைந்தபட்ச இருப்பாக ரூ.5 ஆயிரம வைத்திருக்க வேண்டும் என்று நிலை இருந்தது. அது ரூ.3 ஆயிரமாகக் குறைப்படுகிறது. ஒருவேளை அந்த ரூ.3ஆயிரம் ரூபாயையும் குறைந்தபட்ச இருப்பாக பராமரிக்க இயலாமல், ரூ.1500 மட்டும் வைத்திருந்தால் ரூ.10 அபராதமும், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும். 75 சதவீத குறைந்தபட்ச இருப்பும் இல்லாவிட்டால் ரூ.15 அபராதமும், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.
2. சிறிய நகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கிளைகளில் கணக்கு வைத்து இருப்போர் மாதம் குறைந்த பட்ச இருப்பாக ரூ.2 ஆயிரமும், கிராமப்புறங்களில் ரூ.1000 வைத்திருக்க வேண்டும்.
சிறிய நகரங்களில் வசிப்போர் தங்கள் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு 50 சதவீதம் மட்டுமே வைத்திருந்தால் ரூ.7.50 ஜிஎஸ்டி வரியும், 75 சதவீதம் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காமல் இருந்தால், ரூ.10 அபராதம், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும். 75 சதவீதத்துக்கு அதிகமானால் ரூ.12 அபராதம், ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.
3. கிராமப்புறங்களில் உள்ள வங்கியில் குறைந்தபட்ச இருப்பு 50 சதவீதத்துக்கும் குறைந்தால் ரூ.5 அபராதமும் ஜிஎஸ்டி வரியும், 75 சதவீதமாகக்குறைந்தால் ரூ.7.50 அபராதமும், 75 சதவீதத்துக்கு கீழ் குறைந்தால் ரூ.10 அபராதமும் ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்
4. என்இஎப்டி(நெப்ட்) மூலம் பணம் அனுப்பும் கட்டணம் மாற்றப்படுகிறது. ரூ.10 ஆயிரம் வரை பணம் NEFT முறையில் அனுப்பினால் 2 ரூபாயும் ஜிஎஸ்டி வரியும், ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக பரிமாற்றம் செய்தால் ரூ.20, ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.
5. ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை ஆர்டிஜிஎஸ் செய்தால் ரூ.20கட்டணம் ஜிஎஸ்டியும், ரூ.5 லட்சத்துக்கும் மேல் ஆர்டிஜிஎஸ் செய்தால் ரூ.40 கட்டணம் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும்.
6. ஒருவர் தன்னுடைய சேமிப்பு கணக்கில் இருந்து மாதத்துக்கு 3 முறை டெபாசிட், பணம் எடுத்தலுக்கு கட்டணம் இல்லை. அதன்பின் செய்யப்படும் பரிமாற்றத்துக்கு ரூ.50 கட்டணம், ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.
7. ஒருவர் கணக்கு வைத்துள்ள எஸ்பிஐ வங்கி தவிர்த்து வேறு கிளையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக