இந்த வலைப்பதிவில் தேடு

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

வியாழன், 24 அக்டோபர், 2019




தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது. 


அதன்படி, கடந்த ஆண்டு காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. 

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 


மேலும், பள்ளிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அமைதி காக்க வேண்டிய இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. 

COMMENT
இதேபோன்று குடிசைகள் இருக்கும் பகுதிகளில் நெருப்பு பற்றக்கூடிய வகையில் பட்டாசு வெடிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent