இந்த வலைப்பதிவில் தேடு

குரு பெயர்ச்சி 2019: குருவினால் பலனடையப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

சனி, 2 நவம்பர், 2019



குரு பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி நிகழப் போகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதி நிகழப்போகிறது. குரு அமரும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெரும். குரு பகவான் தனுசு ராசியில் அமர்ந்து ஐந்து, ஏழு, ஓன்பதாம் பார்வையாக மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளை பார்க்கிறார்.



குருவின் சஞ்சாரம், குருவின் பார்வையை பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது யாருக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று பார்க்கலாம். எந்த ராசிக்கு எந்த குரு,



மேஷம் - பாக்ய குரு
ரிஷபம் - அஷ்டம குரு
மிதுனம் - களத்திர குரு
கடகம் - ருண ரோக சத்ரு ஸ்தான குரு
சிம்மம் - பூர்வ புண்ணிய குரு
கன்னி - சுக ஸ்தான குரு
துலாம் - தைரிய குரு
விருச்சிகம் - குடும்ப குரு
தனுசு - ஜென்ம குரு
மகரம் - விரைய குரு
கும்பம் - லாப குரு
மீனம் - தொழில் ஸ்தான குரு

இந்த குரு பெயர்ச்சியால் கல்வி, வேலை வாய்ப்பு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும், சிலருக்கு திருமண பாக்கியமும், குழந்தை பாக்கிய தடை உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கை கூடி வரும்.




குருவினால் கிடைக்கப் போகும் சந்தோஷத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.


மேஷம் - பாக்ய குரு

ஒன்பதாம் வீட்டு குரு பாக்யங்களை அள்ளித்தரப்போகிறார். பாக்ய ஸ்தான குருவினால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். குருவின் பார்வையால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குரு பகவான் உங்க ராசியின் மீது விழுவதோடு மட்டுமல்லாது ராசிக்கு முன்று ஐந்தாம் வீடுகளின் மீது விழுகிறது. தைரியம் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகளும் பூர்வ புண்ணிய சொத்துக்களினால் வருமானமும் கிடைக்கும். நிறைய நன்மைகளும் சந்தோஷமும் அதிகரிக்க குருபகவானை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்கலாம்.

ரிஷபம் - அஷ்டம குரு

எட்டாம் வீட்டில் அமரும் குரு அஷ்டம குரு உங்களின் கஷ்டங்களை போக்குவார். எட்டாம் வீட்டு அதிபதி எட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். நினைத்த காரியங்கள் தாமதமானாலும் நடக்கும். வேலைக்காக வேறு இடம் போக வேண்டாம். இருக்கிற பதவியை தக்க வைத்துக்கொள்ளுங்கள். அஷ்டம சனியினால் ஏதாவது நடந்திருமோ என்று பயமும் கவலையும் அதிகரிக்கும். அந்த கவலையை குரு போக்குவார். குரு பார்வையால் பணவரவு கூடும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உறக்கமின்றி தவித்த உங்களுக்கு சுகமான உறக்கம் வரும். இனிய பயணங்கள் கிடைக்கும். பாதிப்புகள் குறைய குருபகவானை வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். மஞ்சள் வஸ்திரம் தானம் பண்ணுங்க.



மிதுனம் - களத்திர குரு

ஏழாம் வீட்டில் அமரப்போகும் களத்திர ஸ்தான குருவின் நேரடி பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். திருமண தடை நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். பணம் பொருள் செல்வம் தேடி வரும். சுகமும் சந்தோஷமும் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். மேலும் நல்லது நடக்க வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை உடுத்துங்கள் குருவிற்கு விரதம் இருங்க. வியாழன் விரதம் வெற்றிகளை தேடித்தரும்.




கடகம் - ருண ரோக சத்ரு ஸ்தான குரு

ஆறாம் வீட்டில் அமரப்போகும் குரு ருண ரோக சத்ரு ஸ்தான குரு. நோய் ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் எதிரிகள் பிரச்சினைகளில் இருந்து ஜாக்கிரதையாக இருங்க. தொழிலில் கவனமாக இருங்க. ஆறாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டிற்கு வருவதால் விபரீத ராஜயோகம் தரும். கண்நோய்கள் வரும் கவனமாக இருங்க. குரு பார்வையால் பணவரவும் வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும் சந்தோஷங்கள் அதிகரிக்க குருபகவானை சரணடையுங்கள் நல்லது நடக்கும்.

சிம்மம் - பூர்வ புண்ணிய குரு

பூர்வ புண்ணியத்தில் அமரப்போகும் குருவினால் உங்கள் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு தேடி வரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். புகழும் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் அசைவம் தவிர்த்து விரதம் இருந்து குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க நல்லது நடக்கும்.


கன்னி - சுக ஸ்தான குரு

நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு 12,10, 8 ஆம் வீடுகளின் மீது விழுவதால் சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷமும் சௌபாக்கியமும் பெருகும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்க மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று வணங்கி வாங்க நல்லது நடக்கும்.

துலாம் - தைரிய குரு

மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் உங்கள் தைரியம் அதிகரிக்கும் என்றாலும் நீங்க பணம் விசயத்தில் கவனமாக இருங்க. யாரையும் நம்பி பணத்தை கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. குருவின் பார்வை உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும். வியாழக்கிழமை குருவிற்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.


விருச்சிகம் - குடும்ப குரு

குரு தனம், குடும்ப வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். குருவினால் உங்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து அதிர்ஷ்டம் வருகிறது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. ஏழரை சனியால் கஷ்டப்பட்டு, ஜென்ம குருவால் அவதிப்பட்டு வந்த உங்களுடைய பிரச்சினைகள் அத்தனையும் தீரும் காலம் வந்து விட்டது. நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க வியாழக்கிழமை வியாழ ஓரையில் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும்.



தனுசு - ஜென்ம குரு


தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். குரு பகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். ஜென்ம குரு என்று பயப்பட வேண்டாம். குருவின் பார்வையால் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கைகூடி வரும் பாக்கியங்கள் தேடி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டாலும் குரு பார்வையால் சீக்கிரம் சரியாகி விடும். ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும். குரு அருள் புரியும் ஆலய தரிசனம் அற்புதங்களை ஏற்படுத்தும்.


மகரம் - விரைய குரு



மகரம் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் குரு அமரப்போகிறார். விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது விபரீத ராஜயோகம். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க பாடு பட்டாலும் முடியாது மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க மவுன விரதம் இருங்க. வம்பு சண்டைக்கு போகாதீங்க. குருவின் சுப பார்வை ராசிக்கு நான்கு, ஆறு, எட்டு, யால் நோய்கள் தீரும் கடன்கள் அடைபடும் கண்டங்கள் விலகும். வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள். குரு பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் பாதிப்புகள் நீங்கும்.


கும்பம் - லாப குரு

லாப ஸ்தானத்தில் குரு பகவான் அமரப்போகிறார். குருவின் பார்வை உங்க தைரிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. செய்யும் தொழிலில் லாபம் வரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேலையில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். திருமணம் நடைபெறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களின் வீட்டில் மழலை சத்தம் கேட்கும் நேரம் வந்து விட்டது. வியாழக்கிழமை தப்பித்தவறி கூட அசைவம் சாப்பிடாதீங்க.

மீனம் - தொழில் ஸ்தான குரு

உங்க தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு அமர்கிறார். பத்தில் குரு பதவி பறிபோகும் என்று பயம் வேண்டாம். பத்துக்கு அதிபதி பத்தில் அமரும் காலம் ஹம்ச யோக காலம். குருவின் பார்வையால் பணம் தாராளமாக வரும். அதே நேரத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாமல் போகும். தொழிலில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும் கவனமாக இருங்க. வியாழக்கிழமை விரதம் இருங்க நன்மை தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent