இந்த வலைப்பதிவில் தேடு

இம்மாதம் 22 பள்ளி வேலை நாட்கள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

புதன், 9 அக்டோபர், 2019



விஜயதசமி விடுமுறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப் படுகின்றன. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அக்., 3ல் வகுப்புகள் துவங்கின.


இரண்டு நாட்கள் வகுப்புகள் நடந்த நிலையில், விஜயதசமிக்காக மீண்டும் விடுமுறை விடப்பட்டது. அக்., 5 முதல் நேற்று வரை, நான்கு நாட்கள், பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இந்த மாதம், மொத்தம், 22 நாட்கள் மட்டுமே, வேலை நாட்களாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில், வரும், 12ம் தேதி, சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.


இந்த வருடத்திற்கான தீபாவளி அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. அதற்கு முதல் நாள் சனிக்கிழமையும், அடுத்த நாள் திங்கட்கிழமையும் சேர்த்து மூன்று நாட்களாக விடுமுறை வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில் தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை நாள் என்றும், அதற்கு முன்னால் சனிக்கிழமையும், அடுத்த நாள் திங்கட்கிழமையும் பள்ளிகள், அலுவலகங்களுக்கு வேலை நாட்கள் என செய்தி வெளியாகியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி ஒரு நாள் என்றாலும் அதற்கு 2 அல்லது 3 நாட்கள் முன்னதிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடுவது வாடிக்கை.

மேலும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்து சென்று வருவது மிகவும் சிக்கலான ஒன்றாகும். இதனால் இந்த தீபாவளி எப்படி அமைய போகிறதோ என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent