இந்த வலைப்பதிவில் தேடு

28ம் தேதி தீபாவளி விடுமுறையா? பள்ளிக்கல்வித்துறை புதிய விளக்கம்

வியாழன், 10 அக்டோபர், 2019




தீபாவளி பண்டிக்கைக்கு முதல்நாள் விடுமுறை நாள்  என்று பரவிய செய்தியை அடுத்து, விடுமுறை ஏதும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை. அந்த நாள் வார விடுமுறை  நாளான ஞாயிறு. அதனால் தீபாவளி பண்டிகை நாளான 27ம் தேதி அரசு விடுமுறை இல்லை. ஆனாலும், பண்டிகைக்கு முதல் நாளான 26ம் தேதி சனிக்கிழமை. அந்த நாளில் பள்ளிகளுக்கு வேலை நாள் என்று கூறப்படுகிறது. தீபாவளிக்கு  மறுநாள் 28ம் தேதி திங்கட்கிழமை அன்று அமாவாசை நோன்புநாள் என்பதால் 28ம் தேதியும், உள்ளூர் விடுமுறை அறிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக நேற்று காலை முதலே செய்தி பரவியது. இதனால்  பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.



இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கூறியதாவது:தீபாவளி பண்டிகையை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டது தொடர்பாக வெளியான தகவல் உண்மை அல்ல. கடந்த 6 மாதத்துக்கு முன்பே, பள்ளிக் கல்வித்துறையின் நாட்காட்டி  வெளியிடப்பட்டது. அப்போதே, அக்டோபர் 26, 27ம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 28ம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்பில் விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை. அதனால், தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை கூடுதலாக வேறு எந்த விடுமுறையும் அறிவிக்கவில்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent