இந்த வலைப்பதிவில் தேடு

4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்

புதன், 16 அக்டோபர், 2019



தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.


வரும் 18ம் தேதி வரை தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் உள்கர்நாடகா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

2 நாளில் விலகல்
தென்மேற்கு பருவமழை
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி நேற்று கூறுகையில், "தென்மேற்கு பருவ மழை வடக்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் விலக்கிக் கொள்ளப்பட்டது.



வங்கக்கடலின் அதிக பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவ மழை விலக்கி கொள்ளப்படும். இதேபோன்று வடக்கு அரபிக்கடலில் மீதமுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை அடுத்த இரண்டு நாட்களில் படிப்படியாக திரும்பப்பெறப்படும்.

17ம் தேதி ஆரம்பம்



இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 17ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.

இன்று பலத்த மழை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்றார்.
இதனிடையே சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, வேளச்சேரி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, தியாகராயநகர், அசோக்நகர், மதுரவாயல், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent