இந்த வலைப்பதிவில் தேடு

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது: பள்ளிகல்வித் துறை திட்டவட்டம்

வெள்ளி, 18 அக்டோபர், 2019




அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப் பட்டு வருகின்றனர்.


அதன்படி இப்போது 12 ஆயிரம் பேர் வரை பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் பள்ளி களில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். இதற்கு ரூ.7,700 மாத சம்பளமாக தரப்படு கிறது. இதற்கிடையே ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அனைத்து நிதி ஆதாரங்களும் மத்திய அரசுதான் வழங்கி வருகிறது.


எனவே, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய சாத்தியக் கூறுகள் இல்லை. இவர்களை பணியமர்த் தும்போது இது தற்காலிக பணி என்பதை உறுதியாக தெரிவித்த பின்னரே வேலை வழங்கப்பட்டது. பகுதிநேர ஆசிரியர்களின் மாத தொகுப்பூதியத்தை ரூ.10 ஆயிர மாக உயர்த்த கூடுதல் நிதி வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

விரைவில் நிதி கிடைத்தவுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும். எனவே, பணிநிரந்தரம் செய்வதாக வரும் தகவலை நம்ப வேண்டாம். இதுதொடர்பாக தவறான நபர்களிடம் பணத்தை கொடுத்தும் ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம். ஆசிரியர்கள் விரும்பினால் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே இடமாறுதல் தரப்படும்’’ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent