இந்த வலைப்பதிவில் தேடு

படித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்

செவ்வாய், 22 அக்டோபர், 2019



தான் படித்த அரசு பள்ளியில், மாணவர்கள் வருகை குறைந்ததையடுத்து, பெண் இன்ஸ்பெக்டர், அப்பள்ளியை தத்தெடுத்து புனரமைத்து கொடுத்துள்ளார்.

வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், வடசென்னை நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. கடந்த, 1941ம் ஆண்டு துவங்கப்பட்ட பழமையான இந்த பள்ளியில், தற்போது, 60க்கும் குறைவான மாணவ - - மாணவியர் மட்டுமே படிக்கின்றனர். பழமை வாய்ந்த இப்பள்ளி, மிகவும் மோசமான நிலையில், மக்களுக்கு தெரியாத வகையில், பழுதடைந்து, பொலிவிழந்து காணப்பட்டது.


தற்போது, கிண்டியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவில் பணிபுரிந்த ஆய்வாளர் காஞ்சனா, 47, இப்பள்ளியில், 1982ல், கல்வி பயின்ற மாணவி ஆவார்.அவர், தான் படித்த பள்ளியில், மாணவர் சேர்க்கை குறைந்து இருப்பதை அறிந்து, பொலிவிழுந்த பள்ளியை தத்தெடுத்தார். தன் சொந்த செலவில், 50 ஆயிரம் ரூபாயில், பாழடைந்த கட்டடத்திற்கு, வர்ணம் பூசி புதுப்பித்தார்.


பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு,பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.மேலும், இன்ஸ்பெக்டர் காஞ்சனா, தேசிய மற்றும் சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்று, 400க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றவர். ஆய்வாளர் காஞ்சனாவை பாராட்ட விரும்புவோர், 98401 19466 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent