இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - விடுமுறை இல்லை - பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

வியாழன், 17 அக்டோபர், 2019




சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டுகிறது.


இந்நிலையில்  சென்னையில் விடுமுறை இல்லை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

டகிழக்கு பருவ மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கும்,  பெற்றோர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சீதா லெட்சுமி வெளியிட்ட அறிவிப்பு : சென்னையில் பள்ளிகள் அனைத்தும் இன்று வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent