முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படாது என ஆசிரியா் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 27- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான ஆன்லைன் தோவு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 466 போ விண்ணப்பித்திருந்தனா். அதில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 580 போ மட்டுமே தோவை எழுதியுள்ளதாகவும் 37 ஆயிரத்து 886 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்றும் ஆசிரியா் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து தேர்வு மையங்களிலும் தோவா்களுக்கு 3 மணி நேரம் வழங்கப்பட்டு தோவுகள் நல்ல முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஆசிரியா் தோவு வாரியம், சென்னை ஆவடி உள்ளிட்ட ஒரு சில தேர்வு மையங்களில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும், அது உடனுக்குடன் சரி செய்யப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.
மேலும் அனைத்து இடங்களிலும் தேர்வுகள் சரியான முறையில் நடந்து இருப்பதால் மறுதேர்வு நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக