இந்த வலைப்பதிவில் தேடு

மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் - அரசு வேடிக்கை பார்க்காது - முதல்வர் பழனிசாமி

வியாழன், 31 அக்டோபர், 2019





மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கங்கள் திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கங்கள் போராட்டத்தில் ஈடுப்படவில்லை  என்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும் பணிக்கு வராமல் பிடிவாதம் காட்டும் மருத்துவர்களை அரசு வேடிக்கை பார்க்காது என்று எச்சரித்த முதல்வர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் பணிக்கு வர மறுக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் கூறினார்.


அரசு மருத்துவ கல்லூரியில் படிப்போருக்கு தலா ரூ.1.24 கோடி மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது.

*மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசு இவ்வளவு செலவு செய்து படிக்கவைக்கிறது.

*நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை அளித்தால் எப்படி நிறைவேற்ற முடியும்.

*போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent