இந்த வலைப்பதிவில் தேடு

EMIS - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

செவ்வாய், 15 அக்டோபர், 2019



மாநில திட்ட இயக்குனர்- ஒருங்கிணைந்த கல்வி அவர்களின் அறிவுரையின்படி, அனைத்து அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகள், பள்ளி வேலை நாட்களில்மாணவர் வருகையை மாணவர் வருகை கைபேசி செயலியிலும்(MOBILE APP), ஆசிரியரின்  வருகையை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது சார்ந்து கடந்த ஒரு வருட காலத்தில், எண்ணற்ற சுற்றறிக்கைகள் முதன்மை கல்வி அலுவலகத்திலி ருந்தும், சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகங்களிலிருந்தும் பள்ளிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மேற்காண் பதிவுகளை, தவறாமல்மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருசில பள்ளிகள் பதிவை மேற்கொள்வதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகின்றன. அந்த பள்ளிகளின் பட்டியல் முதன்மை கல்வி அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டு  மேல் நடவடிக்கைகாக, உள்ளது.மேலும், இன்று(14.10.2019) மதிப்பு மிகு மாநில திட்ட இயக்குனர் அவர்களின் தொலைபேசி வழி உத்தரவிற்கிணங்க, மரியாதைக்குரிய முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கீழ்காணும் அறிவுரைகள் முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டது.

1.அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசு ஆணைக்கிணங்க, ஒவ்வொரு பள்ளி வேலைநாளிலும் தவறாமல், அனைத்து வகுப்புகளுக்கும், மாணவர் மற்றும் ஆசிரியர்களின்வருகையை, முறையே மாணவர் வருகை பதிவு செயலி மற்றும் கல்வி தகவல் மேலாண்மை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

2. இனி வரும் ஒவ்வொரு பள்ளி வேலை நாளிலும், பகுதியளவு பதிவு பதிவுகள்( partially marked )இல்லாமல் அனைத்து வகுப்புகளுக்கும் பதிவை உறுதி செய்ய வேண்டும்.

3.பயோமெட்ரிக் கருவியில் ஆசிரியரின் வருகை பதிவை  செய்வது முக்கிய மானதாகும். அத்துடன் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில், தலைமையாசிரியர், ஆசிரியர்களின் வருகை பதிவு பதிவை  தவறாமல்  மேற்கொள்ள வேண்டும்.

4. பெரும்பாலான ஈராசிரியர் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் பயிற்சியின் பொருட்டு வெளியே செல்லும்போது, மற்றொரு ஆசிரியர் தனக்கு மேற்காணும் பதிவுகளை மேற்கொள்ள தெரியாது  என்பதைதவிர்க்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் மேற்காணும் பதிவுகளை மேற்கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.


5.வேறொரு பள்ளிக்கு மாற்று பணிக்காக ஒரு ஆசிரியர் செல்லும் பட்சத்தில், அன்றைய தினம் அப்பள்ளியின், அவரது வகுப்பிற்கான  மாணவர்களின் வருகைப் பதிவு,அவரால் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

6. மேற்காணும் பதிவுகளில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு வட்டார அளவிலான   குழுக்களை அணுகி தீர்வுகளை பெற்று உடனடியாக பதிவை மேற்கொள்ள வேண்டும்.

7. தொடர்ந்து  மேற்காணும் பதிவுகளை சிறப்பாக  செய்துவரும் அனைத்து பள்ளிகளுக்கும் பாராட்டுக்கள்.

8.அரசின் உத்தரவின்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேற்காண் பதிவுகளை மேற்கொள்வது ( ஒவ்வொரு பள்ளி வேலைநாள் நாட்களிலும் ) இப்பள்ளிகளின் தலையாய கடமையாகும்.

9.ஒவ்வொரு வார இறுதியில், அனைத்து பள்ளிகளிலும் வார சராசரி பதிவுகளை ஆராய்ந்து, உரிய வழியில் பதிவுகளை மேற்கொள்ளாத  பள்ளிகளை பட்டியலிட்டு, வாரத்தின் இறுதி பள்ளி வேலைநாளில், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், பள்ளி வேலைநேரம் பாதிக்காத வகையில், மாலை 5 மணி க்கு நேரடியாக ஆஜராகி, விளக்கமளிக்க வேண்டும்.

மேற்காண்  நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு,சார்ந்தபதிவுகளை அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தவறாமல் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றன.

முதன்மைக் கல்வி அலுவலகம், காஞ்சிபுரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent