இந்த வலைப்பதிவில் தேடு

11 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்பு!

சனி, 16 நவம்பர், 2019

'வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வால், 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை, மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தெற்கு கடலோரமாவட்டங்களிலும், வெப்பச்சலனம் காரணமாக வட மாவட்டங்களிலும், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.


திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய, 11 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும், அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent