தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதையடுத்து, அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்புவதில்லை என அவர் தெரிவித்திருந்தார். சென்னை கோட்டூர்புரத்தில் ஆங்கில வழிகாட்டி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மாணவர்கள் முழுநேரமும் படித்து அதிக மதிப்பெண்களை பெற பெற்றோர்கள் விரும்புவதாக கூறினார். மேலும் பள்ளிகளை சுத்தப்படுத்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக