இந்த வலைப்பதிவில் தேடு

அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை - சென்னை வானிலை மையம்

சனி, 30 நவம்பர், 2019



அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரி கடல், மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறில் 16 செ.மீ., மயிலாடுதுறையில் 14 செ.மீ., புதுக்கோட்டை மற்றும் தலைவாசலில் தலா 13 செ.மீ., மழை பெய்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent