இந்த வலைப்பதிவில் தேடு

5 , 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

வியாழன், 28 நவம்பர், 2019



தமிழ்நாட்டில் 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித்திற மேம்பாட்டை அறிய பொதுத்தேர்வு நிச்சயம் தேவை என்றும் அவர் கூறினார். 12-ம் வகுப்பு முடித்த 20 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து ஆடிட்டர் படிப்பிற்காக 500 ஆடிட்டர்களை கொண்டு இலவச பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.




பிளஸ் 2 மாணவர்களுக்கு தொழில்கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது மாநில அரசின் கொள்கை என கூறிய அவர், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே, வழக்கு முடிந்த பிறகு தான் அது குறித்து பேச முடியும் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் புதிய அறிவிப்பாக அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் தினசரி 15 நிமிடம் உடற்பயிற்சி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent