இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளியா, திரையரங்கா? மாணவியருக்கு விஜய் 'ஸ்டிக்கர்'

சனி, 16 நவம்பர், 2019



அரசு மேல்நிலைப்பள்ளியில், நடிகர் விஜய் படத்தின், 'ஸ்டிக்கர்'களை, மாணவியருக்கு வழங்கியதற்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


மதுரை மாவட்டம், மேலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், விஜய் ரசிகர்கள் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று(நவ.,15) நடந்தது. சிறப்பு விருந்தினராக, நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


படிப்பு, விளையாட்டுகளில் சிறந்த மாணவியருக்கு பதக்கங்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, விஜய் நடித்த, பிகில் படத்தின் ஸ்டிக்கர்கள், மாணவியருக்கு வழங்கப்பட்டன. 'இதற்கு, ஆசிரியர்கள் எப்படி அனுமதித்தனர்' என, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி மீனாவதி கூறுகையில், ''நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent