இந்த வலைப்பதிவில் தேடு

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் புகார் : நெல்லை ஆட்சியர், தேர்வு வாரியத்துக்கு நோட்டீஸ்

வியாழன், 21 நவம்பர், 2019



சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் புகார் தொடர்பாக நெல்லை ஆட்சியர், தேர்வு வாரியத்துக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


நெல்லையைச் சேர்ந்த முத்து என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், ஓவிய ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றிருந்தும், தனக்கு பணி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

புகார் தொடர்பாக 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான பதிலை ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த பதிலும் வரவில்லை எனில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent