இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளி வளாகத்தில் மாணவி மரணம் - போராட்டத்தை கை விட்ட உறவினர்கள் - அஞ்சலி செலுத்திய அமைச்சர் - அதிர்ச்சி அளித்த உடற்கூறு ஆய்வு முடிவு

செவ்வாய், 12 நவம்பர், 2019

/div>


ஈ எறும்புக்குக்கூட கெடுதல் நினைக்கமாட்டாள். ஆனா, அவளுக்குப் போய் இப்படி ஆயிட்டே. இனி அவள் இல்லாமல், எங்க கிளாஸ்ரூம் வெறுமையா இருக்கும். தினமும் அவல் அமரும் இடத்தில் சூழும் வெறுமையைப் பார்த்து பார்த்து நாங்க நொந்துபோவோம். யாருக்கும் துரோகம் நினைக்காத கோமதிக்கு ஏன் இப்படி ஆகணும்?


பள்ளிக்கு வந்து ப்ளஸ் டூ மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில், பள்ளி தொடங்கும் முன்னே மயங்கி விழுந்து இறந்த சம்பவம், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


கரூர் நகராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன்கோயில் பகுதியில், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், பசுபதிபாளையம் வடக்குத் தெருவை சேர்ந்த ஆனந்தன் மகள் கோமதி (வயது 17), பயாலஜி குரூப் எடுத்து படித்து வந்தார் வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்த மாணவி கோமதி பள்ளி வகுப்பு தொடங்கும் முன்பே மயக்கம் போட்டு பள்ளி வளாகத்தில் கீழே விழுந்தார். அப்போது பணியில் இருந்த ஆசிரியர்கள் மாணவிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்ததோடு, மாணவியை உடனடியாக கரூர் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர். 


ஆனால், செல்லும் வழியிலேயே பள்ளி மாணவி கோமதி உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் குறித்து அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரோசி வெண்ணிலா ஆகியோர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். 

மாணவி கோமதிக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்ததால், மயக்கமுற்ற அவர் நாடித்துடிப்பு குறைந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. அதே சமயம், 'கோமதிக்கு எந்தவித நோயும் இல்லை. பள்ளி வளாகத்தில்தான் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது. இது மர்மமாக உள்ளது. உண்மை தெரியும்வரை கோமதி உடலை வாங்கமாட்டோம்" என அவரின் தாயார் மருத்துவமனை வளாகத்தில் அதிகாரிகள் விசாரணையின்போது கூறி கதயழுதார்.


கோமதியின் உறவினர்கள், சாலைமறியல் போராட்டம் செய்ய ஆயத்தமானார்கள். ஆனால், அவர்களைச் சமாதானப்படுத்திய எஸ்.பி, 'உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு, அதன் ரிசல்டை பார்த்துட்டு நீங்க எது வேண்டுமானாலும் பண்ணுங்க' என்று கூறினார். இதனால், கோமதி உறவினர்கள், தங்களது போராட்ட எண்ணத்தை கைவிட்டனர். உடற்கூறு ஆய்வில், கோமதிக்கு அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டதே, திடீரென மயங்கிவிழுந்து இறந்ததற்குக் காரணம் என்று தெரியவர, சோகமாகக் கோமதி உடலை பெற்றுச் சென்றனர். இதற்கிடையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இறந்த மாணவியைப் பார்த்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மருத்துவமனை வளாகத்தில் குவிந்த அவரின் தோழிகள் பலரும் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர்.


நம்மிடம் பேசிய அவரின் தோழிகள் சிலர், "கோமதியைப் போல் ஒரு நல்ல பெண்ணைப் பார்ப்பது கஷ்டம். நல்லா படிப்பா. அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம்னா, ஓடிவந்து உதவுவா. எல்லா ஆசிரியைகளுக்கும் ரொம்ப பிடிச்ச மாணவியா இருந்தா. ஈ எறும்புக்குகூட கெடுதல் நினைக்கமாட்டா. ஆனா, அவளுக்குப் போய் இப்படி ஆயிட்டே. இனி அவள் இல்லாம, எங்க கிளாஸ்ரூம் வெறுமையா இருக்கும்.


தினமும் அவள் இருக்கும் இடத்தில் சூழும் வெறுமையைப் பார்த்து பார்த்து நாங்க நொந்துபோவோம். யாருக்கும் துரோகம் நினைக்காத கோமதிக்கு ஏன் இப்படி ஆகணும்" என்று வெடித்து அழுது கேட்டார்கள்.

அதற்கு நம்மிடமும் பதில் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent