இந்த வலைப்பதிவில் தேடு

பணிமாறுதல் ஆணை பெற்ற பின்பும் விடுவிக்கப்படாததால் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை!!

புதன், 27 நவம்பர், 2019



நடந்து முடிந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் முழுமையாக காட்டப்ட்டதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் சொந்த மாவட்டத்திற்கும் அருகில் உள்ள மாவட்டத்திற்கும் மாறுதல் ஆணை பெற்றனர்.



கலந்தாய்வு முடிந்து நான்கைந்து நாட்கள் ஆன பிறகும் ஆசிரியர்கள்  இன்னும் பணியில் இருந்து விடுவிக்கப்படாததால் இரண்டு நாட்களாக அலைந்து கொண்டுள்ளனர்.


அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது வட மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற்று செல்வதால் கல்விப்பணிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. 

எனவே அதற்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் அல்லது இந்த கல்வியாண்டு இறுதிவரை பணியாற்ற வேண்டி வரலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பணிமாறுதல் ஆணை வாங்கிய பின்னரும் மனஉளைச்சலில் இருப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent