கற்றல்-கற்பித்தல் தடையின்றி சிறப்பாக நடைபெற்றது. தற்போது பல்வேறு காரணங்களால் பொதுக் கலந்தாய்வு தடைப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்திருந்தால் மட்டும் இடமாறுதல் உள்ளிட்ட வழக்குகள் என பொதுக்கலந்தாய்வு நடைபெறாமல் காலாண்டுத்தேர்வும் முடிவடைந்த நிலையில் ஆசிரியர்களின்றி பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்.
மேலும், அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு, பணி நிரவல் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாண்டு விதிமுறையை தளர்த்தி 2019-20 ஆம் ஆண்டு கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது உயர்நிலைப்பள்ளிகளில் 400 தலைமையாசிரியர் பணியிடங்களும் மேல்நிலைப்பள்ளிகளில் 600 தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதால் பல்வேறு பணிகள் கற்பித்தல் பணியும் பார்த்துக்கொண்டு பொறுப்பாசிரியராகம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதியும் ,இந்த ஆண்டு முதலாவது குடும்பத்துடன் இருந்து மனநிறைவோடு ஆசிரியர் பணித்தொடர காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்திசெய்திடும் வகையில் ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக