இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வார நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்?

திங்கள், 18 நவம்பர், 2019


அஸ்வினி -
சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம் . முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இப்போது கிடைக்கும். காசோலைகள் எதுவும் தருவதாக இருந்தால், கவனம் தேவை. ஒப்பந்தங்களை படித்துப் பார்த்து திருப்தி ஏற்பட்ட பின் கையெழுத்திடுங்கள். திருமணமாகாதவர்களுக்கு இந்த வாரம் திருமணம் உறுதியாகும்.


உத்தியோகம் -
பெரிய மாறுதல் ஏதும் இல்லை. சகஜ நிலையில் இருக்கிறது. முடித்துவிட்டதாக நினைத்த வேலையில் மீண்டும் திருத்தங்கள் செய்ய வேண்டிய நிலை வரும். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், துறை சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன் நன்கு பரிசீலனை செய்ய வேண்டும். சிறு நிறுவனங்கள், கடைகளில் வேலை செய்பவர்கள், வேலையை விட்டு விலகி வேறு நிறுவனத்திற்கு சேரும் எண்ணத்தை சற்று தள்ளி வையுங்கள், இந்த வாரம் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பொதுவாக எந்தத் துறையில் நீங்கள் பணிபுரிந்தாலும், வேலையை விட்டு விலகும் எண்ணத்தை இந்த வாரம் செய்ய வேண்டாம்.

தொழில் -
தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. எதிர்பார்த்த பணம் இந்த வாரக் கடைசியில் உங்கள் கைக்கு வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ரியல் எஸ்டேட் துறையினர் இந்தவாரம் விற்பனைகள் அதிகமாவதை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். பத்திரப் பதிவு செய்வீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு கணிசமான முன்னேற்றம் உண்டு. ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு புதிய நிறுவனத்தோடு ஒப்பந்தங்கள் உண்டாகும்.

பெண்களுக்கு -
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, நிர்வாகத்தின் சார்பில் சில அழுத்தங்கள் கொடுக்கப்படும், பணிச் சுமை அதிகமாகும். குறைவான நேரம் ஒதுக்கி பெரிய வேலையை முடிக்கச் சொல்வார்கள். பொறுமை அவசியம்.


மாணவர்களுக்கு -
கல்வியில் தடை ஏற்படும். படிக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகலாம். தேர்வுகள் ஏதும் இருந்தால் தேர்வுகளில் கலந்துகொள்ள முடியாமல் போகும்.எதிர்பார்த்த மதிப்பெண்கள் குறைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. படிப்பில் முழுக்கவனம் செலுத்துங்கள்.

கலைஞர்களுக்கு -
நிறைய ஒப்பந்தங்கள் உண்டாகும். பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும்.

பொதுப்பலன் -
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சில உபாதைகள் வரும். அதன்பொருட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் இப்போது முழு வடிவம் பெறும். அதற்கான வங்கிக்கடன் இப்பொழுது கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. வாகன மாற்றமும் உண்டு.

இந்த வாரம் -

திங்கள் - அதிக நன்மை ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாட்களாக வராத பணம் திடீரென கைக்கு வந்து சேரும்.

செவ்வாய் - நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அதேசமயம் சுபச் செலவுகளும் உண்டு. பயணங்கள் ஏற்படும். வருமானம் இருமடங்காகும்.

புதன் - ஆலயங்களுக்குச் செல்வீர்கள். குலதெய்வ வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

வியாழன் - குடும்பத்தில் இருந்த பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். குடும்பம் மகிழ்ச்சியாகும். எதிர்பார்த்த பணவரவு கைக்கு கிடைக்கும். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் உறுதியாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும்.


வெள்ளி - வீட்டு பராமரிப்புச் செலவுகள், வாகனச் செலவுகள் உண்டாகும். பேசித் தீர்க்கும் விஷயங்கள் ஏதும் இருந்தால் இன்று அதை செய்ய வேண்டாம்.

சனி- ஆதாயம் தரும் விஷயங்கள் மட்டுமே இன்று முடியும். கமிஷன் வியாபாரம் பேசி முடிக்கப்படும். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும்.
ஞாயிறு - பொதுச் சேவையில் நாட்டம் வரும். மற்றவர்களுக்காக உதவி செய்து உள்ளம் மகிழ்ச்சி அடையும். மனத் திருப்தி உண்டாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மகா விஷ்ணு ஆலயத்தில் இருக்கும் கருடாழ்வாருக்கு, புளியோதரை நைவேத்தியம் செய்து தானம் தாருங்கள், உத்தியோகம் சார்ந்த பிரச்சினைகள் விலகும். மன அமைதி கிடைக்கும். பணத்தேவைகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.

***********************************************************************************


பரணி -
உங்கள் தேவைகள் எளிதில் பூர்த்தி ஆகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் உண்டாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் ஈடேறும். பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினையில் வெளி நபர் ஒருவரால் தீர்த்து வைக்கப்படும். தவறான புரிதல் காரணமாக இளைய சகோதரரிடம் மனவருத்தங்கள் ஏற்படும். அதை பகையாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உத்தியோகம் -
வேலையில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். முக்கியமான கோப்பு அல்லது டாக்குமெண்ட் எங்கே வைத்தோம் என தெரியாமல் அல்லாடுவீர்கள், அல்லது கணினியில் சேமித்து வைத்த தகவல்கள் அழிந்துபோகும், எனவே கவனம் அதிகமாக இருக்கவேண்டும். எச்சரிக்கை உணர்வு அதிகம் வேண்டும். புதிதாக வேலை தேடுவோர் தங்கள் கல்விக்கு குறைவான வேலையே கிடைக்கும். அரசு வேலைக்கு தேர்வு எழுதியவர்கள் வேலை கிடைப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு. சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் பொருட்களைக் கையாளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் அதிகமாகும், இலக்குகளை கடைசி நேரத்தில் எட்டுவீர்கள். வங்கிப் பணியாளர்கள் பணத்தை கையாளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் கடுமை காட்டாமல் இருப்பது நல்லது.

தொழில் -
தொழிலில் சராசரி வளர்ச்சி ஏற்படும். சில முன்னேற்றமான தகவல்கள் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து உபயோகமான தகவல் வந்து சேரும். முதலீடுகள் அயல்நாட்டில் இருந்து எதிர்பார்க்கலாம். தொழில் சார்ந்த வழக்குகள் ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும். அரசுக்கு தாக்கல் செய்யப்பட்ட விஷயங்கள் திருப்பி அனுப்பப்படும், அதில் தேவையான திருத்தங்கள் செய்ய நேரம் ஒதுக்குவீர்கள். கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி ஏற்படும். விற்பனைகள் அதிகமாகும்,நீங்களும் சலுகைகளை அறிவிப்பீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் லாபம் அடையும் வண்ணம் இந்த வாரம் இருக்கும்.


பங்கு வர்த்தகத் துறையினருக்கு நல்ல லாபங்கள் இருக்கும். ஒரு சில நிறுவனங்களின் தகவல்களை சரியாக உறுதிப்படுத்திக் கொண்டு முதலீடு செய்யுங்கள். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் இந்த வாரம் எதுவும் செய்ய வேண்டாம், அடுத்தவாரம் பார்த்துக்கொள்ளலாம். சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். வேலை இல்லாத பெண்களுக்கு வேலை தானாக தேடி வரும். உறவினர்களின் சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சகோதர வழியில் சில வருத்தங்கள் ஏற்படும்.

மாணவர்களுக்கு -
கல்வியில் கவனச்சிதறல் உண்டாகும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் போகலாம். புதிய பயிற்சி மையங்களில் சேருவதற்கு வாய்ப்பு உண்டு.


கலைஞர்களுக்கு -
நல்ல பலன்கள் நடக்கும் வாரம் . பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து ஒப்பந்தம் ஏற்படும். முன்பணமாக ஒரு பெரிய தொகையைப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொதுப்பலன் -
இந்தவாரம் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவேண்டும். காசோலைகள் தருவது, பத்திரப்பதிவு செய்வது, ஒப்பந்தங்கள் போடுவது என அனைத்தையும் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக படித்து பார்த்து ஆலோசனை செய்து கையொப்பமிட வேண்டும். உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி உண்டாகும், அதுதொடர்பான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள் -அலைச்சல் உண்டாகும். அதன்பொருட்டு எரிச்சல் கோபம் வரும். மற்றவர்களிடம் தேவையில்லாமல் எரிந்து விழுவீர்கள்.
செவ்வாய் - நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். மேலும் வீடு, நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரம் பேசி முடிக்கப்படும். பணவரவு இருக்கும்.
புதன் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். அதுதொடர்பான தகவல்கள் இன்று கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணம் கிடைக்கும்.
வியாழன் - வீடு மாற்றும் சிந்தனைகள் உருவாகும். வேலையில் பதவி உயர்வு, பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவை நடக்க வாய்ப்பு இருக்கிறது. முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
வெள்ளி - பணவரவு அதிகரிக்கும். வேலை வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
சனி- செலவுகள் அதிகரிக்கும். வாகனப் பழுது ஏற்படும். தேவையற்ற செலவு ஒன்றை செய்து வருத்தப்படுவீர்கள்.
ஞாயிறு - சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். இன்று அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் சீராகும். கொடுத்த கடன் திரும்பி வர வாய்ப்பிருக்கிறது.
வணங்க வேண்டிய தெய்வம் -
மகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும், எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

**************************************************************************************************

கார்த்திகை -
மனக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். உங்களுடைய இயற்கையான மன உறுதி இப்போது சிறிது பலவீனமாகும். ஆனாலும் குலதெய்வத்தின் அருள் இருப்பதால் இந்த மனக் குழப்பங்களில் இருந்து வெளியே வர வழி கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.
உத்தியோகம் -
இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலர் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுப்பார்கள். ஒரு சிலருக்கு நிர்வாகத்தின் சார்பில் வேலையில் இருந்து விலகும்படி அறிவுறுத்தப்படுவார்கள். சக ஊழியர்கள், மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாகப் பழகுங்கள், ஒரு சிறிய தவறு கூட மிகப்பெரிய அளவில் பெரிதாக்கபடலாம்.
தொழில் -
தொழிலில் போட்டிகள் அதிகமாக இருக்கும். நெருக்கடிகள் உருவாகும். கடன் தொல்லை அதிகமாகும். உங்கள் தொழிலுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அதுவே பெரிய பிரச்சினையாக வந்து சேரும். காசோலை தருவதில் அதிக கவனம் தேவை, எப்படியும் பணம் புரட்டி விடலாம் என கணக்கிட்டு காசோலைகள் தந்தால் கடும் நெருக்கடிக்கு தள்ளப்படுவீர்கள்.
வியாபாரிகள் அளவான லாபம் பார்ப்பார்கள் பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம்.
பெண்களுக்கு -
ஆரோக்கிய பாதிப்புகள் வரலாம். பூர்வீகச் சொத்து விற்பனையில் உங்களுக்கான பங்கு கிடைக்கும். பெரிய கடன் ஒன்றை அடைப்பீர்கள்.

மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடன் ஒன்றை அடைத்து புதிய கடன் வாங்குவீர்கள். வங்கிக் கடன் பெற்று தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்துவீர்கள்.


பொதுப் பலன் -
உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல்களில் எழுத்துபூர்வ ஆதாரம் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். சொத்துக்கள் விற்பனை சுமூகமாக நடக்கும். உடல் நல பிரச்சினைகளில் சரியான மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. புதியகடன் வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பக்கத்து வீட்டினரிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டு பண்ணாதீர்கள். வழக்குகளில் வாய்தா வாங்குவது நல்லது.
இந்த வாரம் -
திங்கள் - மருத்துவச் செலவுகள் குறையும். கடன் ஒன்று தீரும். நல்ல வேலை கிடைக்கும்.
செவ்வாய் - அமைதியாக இருப்பது ஆனந்தம் தரும். பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும், நைச்சியமாக விலகிச் செல்லுங்கள்.
புதன் -இன்று செய்யப்படும் வியாபாரம், தொழில் ,வேலை எதுவாயினும் நிச்சயம் லாபம் உண்டு.
வியாழன் - பயணங்கள் உண்டாகும். அதில் ஆதாயம் கிடைக்கும். அயல்நாடு தொடர்புடைய காரியங்களில் வெற்றிச்செய்தி கிடைக்கும்.
வெள்ளி - இடமாற்றம், வேலை மாற்றம் பற்றிய சிந்தனை தீவிரமாகும். முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள்.மனம் அலைபாயும்.
சனி- எந்த வேலை செய்தாலும், எந்த வியாபாரம் பேசினாலும் முழு வெற்றி உண்டாகும். பணவரவு மன மகிழ்ச்சி தரும்.
ஞாயிறு - வீண் அலைச்சல் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிது பின்னடைவு உண்டாகும். மருத்துவச் செலவு உண்டு.
வணங்க வேண்டிய தெய்வம் -
கால பைரவர் வழிபாடு அவசியம்.செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலை அணிவித்து வணங்குங்கள். எந்த பிரச்சினைகளும் உங்களை அணுகாது.

*****************************************************************************************************


ரோகிணி -
பயணங்கள் அதிகரிக்கும். அயல்நாடு செல்லும் யோகம் ஏற்படும். வேலையில் அழுத்தங்கள் இருக்கும். ஆனாலும் சமாளிப்பீர்கள். கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சொத்து விரயம் அதாவது சொத்து விற்பனை செய்வீர்கள். வழக்குகள் தள்ளிப்போகும்.
உத்தியோகம் - வேலையில் கூடுதல் சுமை உண்டாகும். சக ஊழியர்கள் ஓரளவு உதவுவார்கள். பாராமுகமாக இருந்த உயர் அதிகாரி இப்போது கனிவான அக்கறை காட்டுவார். அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். வருமானம் ஓரளவு இருக்கும்.
தொழில் -

தொழிலில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. இப்போதைக்கு சுமாரான நிலையே நீடிக்கிறது. புதிய முயற்சிகளைத் தொடங்க வேண்டாம். தொழிலை விரிவுபடுத்துகிறேன் என்று அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம்.
கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். தொழிலுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று வருபவர்களை நம்ப வேண்டாம். அவர்களுடைய ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம். அப்படி வருபவர்களால்தான் உங்களுக்கு பிரச்சினைகள் வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையினர் மிகுந்த கவனத்துடன் முதலீடுகளை செய்ய வேண்டும்.
பெண்களுக்கு -

கோபத்தைக் குறைக்க வேண்டும். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. ஒரு சிலருக்கு சொத்துச் சேர்க்கை ஏற்படும். உங்கள் கணவருக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
மாணவர்களுக்கு -
கல்வியில் முன்னேற்றம் உண்டு. உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் எளிதாகக் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
பொதுப்பலன் -
மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். வீடு மாற்றம் ஏற்படும்.உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்ய வேண்டியது வரும்.


இந்த வாரம் -
திங்கள் - பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சம்பந்தமில்லாத வேலைகளைக் கொடுப்பார்கள். அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்கள் வேலையை நீங்கள் செய்து கொடுப்பீர்கள்.
செவ்வாய் - ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் ஏதும் இருந்தால் இன்று அது வசூலாகும்.
புதன் - அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்கள் மீது எரிந்து விழுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. பதட்டத்தைக் குறைக்க வேண்டும்.
வியாழன் -வீடு மாற்றம் வேண்டி தேடுபவர்களுக்கு நல்ல வீடு அமையும். வேலையில்லாதவர்களுக்கு இன்று வேலைக்கான நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி தரும்.
வெள்ளி - நன்மைகள் அதிகரிக்கும். வியாபாரம் பெருகும். பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தினருக்காக செலவு செய்து மகிழ்வீர்கள்.

சனி - முக்கியமான முடிவு ஒன்று எடுப்பீர்கள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.
ஞாயிறு - எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். அந்த சுப நிகழ்வு இன்று நல்ல முடிவு தரும். வீடு வாங்கும் யோகமும் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலயத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை சார்த்தி வணங்குங்கள். எதிர்ப்புகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும். பண நெருக்கடி தீரும்.

************************************************************************************************************************

மிருகசீரிடம் -
கலகலப்பும் சலசலப்பும் கலந்தே இருக்கும். இந்த வாரம் பணத்தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். ஆனாலும் நெருக்கடிகள் குறையாது. ஒரு பிரச்சினை தீரும்போதே இன்னொரு பிரச்சினை நெருங்கி வரும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவையில்லாத வீண் செலவுகளை வைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆனாலும், அதையெல்லாம் சமாளிப்பீர்கள். .
உத்தியோகம் -
வேலையில் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். ஆனாலும் கவலைப்படாமல் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர் விடுமுறைக்குச் செல்வார். அவர் வேலையையும் சேர்த்தே நீங்கள் பார்க்க வேண்டியது வரும். வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நெருக்கடிகள் அதிகமாகும். வேறு வேலைக்கு மாறும் சிந்தனை உண்டாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது.
தொழில் -
தொழில் வளர்ச்சி சுமாராகவே இருக்கும். பெரிய எதிர்பார்ப்புகள் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம். அகலக்கால் வைக்காதீர்கள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஒருசில ஒப்பந்தங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும். அரசு வழியில் இருந்த சில நெருக்கடிகள் இப்பொழுது தீரும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. பங்கு வர்த்தகத் தொழில் செய்பவர்கள் நிதானமாக முதலீடுகளை செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு ஓரளவு வளர்ச்சி, லாபம் உண்டு.
பெண்களுக்கு -
செலவுகள் அதிகமாகும். சேமிப்புகள் கரையும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். ஆடம்பரப் பொருட்கள் நிறைய வாங்குவீர்கள்.
மாணவர்களுக்கு - கல்வியில் இருந்த ஆர்வம் குறையும். தேவையில்லாத ஆடம்பர விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எனவே முழு கவனத்தையும் கல்வியில் செலுத்த வேண்டும்.
கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் அமையும். சில ஒப்பந்தங்கள் ஏற்படும். நீண்ட நாளாக பேசிக் கொண்டிருந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து ஒப்பந்தம் உண்டாகும்.


பொதுப்பலன் -
அவ்வப்போது சிறு சிறு உடல் நல பிரச்சினைகள் வரும். மருத்துவ சிகிச்சைக்குப் பின் சரியாகும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். தேடி வருகின்ற பிரச்சினைகளை சமாதானமாகப் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். பிடிவாதம் பிடிக்க வேண்டாம்.
இந்த வாரம் -
திங்கள் -வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பழையவீட்டு உபயோகப் பொருட்களை கொடுத்துவிட்டு புதிதாக வாங்குவீர்கள்.மருத்துவச் செலவுகள் குறையும். பணவரவு திருப்தி தரும்
செவ்வாய் -விருப்பம் இல்லாத ஒரு வேலையை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து மனநிறைவுபெறுவீர்கள்.
புதன் - ஒரு பெரிய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். தொல்லை தந்த எதிரிகள் விலகிப் போவார்கள். தொலைதூரத் தகவல் நன்மையைத் தரும்.
வியாழன் - உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சமூக வலைதள பயன்பாட்டில் கவனமாக உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள், இல்லையென்றால் அதுவே உங்களுக்கு பிரச்சினையாக மாறும்.
வெள்ளி - வியாபார விஷயமாக பேசி முடிக்கப்படும் எந்த வேலையும் லாபகரமாக இருக்கும். பணவரவு உண்டு. ஆன்மிகப் பயணம் ஏற்படும்.

சனி -வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொலைதூர பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
ஞாயிறு - அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டியது வரும். வீண் செலவுகள், வீண் விரயங்கள் உண்டாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் -
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாராயணம் செய்யுங்கள். காலை மாலை இருவேளையும் படித்து வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும், மனநிம்மதி உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent