இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு - பதவி உயர்வை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம்!

வியாழன், 21 நவம்பர், 2019

''கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது,''என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நவ.,18 முதல் நடக்கிறது. இதில் வாய்மொழி உத்தரவு என ஆசிரியர், மாணவர் நலனுக்கு எதிரான நிலைப்பாடுகளை துறை எடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியர் (வருவாய் மாவட்டத்திற்குள்) மாறுதல் கலந்தாய்வுக்கு பின், ஒன்றிய அளவில் ஏற்பட்டுள்ள அதன் காலிப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை.

அதனை எதிர்பார்த்த ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஒன்றிய முன்னுரிமைப்படி பதவி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாய்மொழி உத்தரவுகலந்தாய்வுக்கு பின் ஏற்பட்ட காலிப்பணியிடங்களில் 5 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையுள்ள பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை.


இதனை நிரப்ப கூடாது என கல்வித்துறை எழுத்து மூலம் உத்தரவை பிறப்பிக்காமல், உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு எனக்கூறி மாநிலம் முழுவதும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை எதிர்நோக்கிஇருந்த இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகள்ஆகஸ்ட்டில் நடந்த பணி நிரவலின் போது வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் 10க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1,500ம் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றப்பட்டன. தற்போது வாய்மொழி உத்தரவாக 5 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.பள்ளி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.


 மாணவர் குறைவான எண்ணிக்கை உள்ள இப்பள்ளிகள் மூடப்படும். பள்ளி நலன் கருதி இக்கலந்தாய்விலேயே தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பவேண்டும்.இப்பிரச்னையில் திருநெல்வேலி, கரூர், விழுப்புரத்தில் ஆசிரியர்கள் அமைதி போராட்டம் நடத்தினர். இவர்களை அதிகாரிகள் மிரட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது. போராடியோர் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டால் சங்கம் களத்தில் இறங்கும். மிரட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent