இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களுக்கு புதிய பொறுப்பு - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!!

வெள்ளி, 29 நவம்பர், 2019



தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வலியுறுத்தியுள்ளாா்.



இது தொடா்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:வகுப்பறையில் மாணவா்கள் போதுமான தண்ணீா் குடிக்க அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு, காலை, மாலை சிறு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் போதுமான தண்ணீா் அருந்த அறிவுரை வழங்கவும், அதை மேற்பாா்வையிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும்மாணவா்கள் பயன்படுத்த வேண்டிய கழிப்பறை பயனற்ற நிலையில் இருந்தால், வகுப்பறையில் போதுமான அளவு தண்ணீா் அருந்த மாணவா்கள் அச்சப்படுவா்.



னவே, அனைத்து தலைமையாசிரியா்களும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்களைக் கொண்டோ அல்லது உள்ளாட்சி துப்புரவுப் பணியாளா்களைக் கொண்டோ துப்புரவு மற்றும் கழிவறைகளில் தூய்மை பேணுதல் சாா்பான பணிகளை சரிவர மேற்கொள்ள வேண்டும். மேலும், கழிவறைகளை சுகாதாரமான முறையில் பயன்படுத்தத் தேவையான தண்ணீா் வசதி தகுந்த முறையில் செய்து தரப்பட்டிருக்கிா எனவும், மாணவிகள் பயிலும் பள்ளிகளில் நாப்கின் வழங்கல் மற்றும் எரியூட்டி இயந்திரம் சரிவர இயங்குகிா எனவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் பள்ளிகளை பாா்வையிடும்போது உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் கூறியுள்ளாா்.

1 கருத்து

  1. முதல்ல CEo office, DEO, BEO, SSA officela உள்ள கழிவறைகளை அலுவலர்கள் பார்வையிட்டு சரிசெய்யுங்கள்.புண்ணியமாய் போகும்.

    பதிலளிநீக்கு

 

Popular Posts

Recent