இந்த வலைப்பதிவில் தேடு

கலந்தாய்வில் தர்ணா செய்த தலைமை ஆசிரியயை - சஸ்பெண்ட் செய்தார் CEO

வெள்ளி, 22 நவம்பர், 2019



மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலத்தில் தலைமை ஆசிரியர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் அய்யம்பட்டி அரசுப் பள்ளி செயல்பட்டுவருகிறது. அந்தப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் இந்திரா. மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருக்கும் அந்தப் பள்ளியிலிருந்து மாறுதல் பெற கடந்த 3 ஆண்டுகளாகவே இந்திரா முயற்சி செய்து வந்திருக்கிறார். இவரது கோரிக்கைக்கு பள்ளிக் கல்வித் துறை செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக திண்டுக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.




அதனால், நம்பிக்கையுடன் இடமாறுதல் கோரிக்கையை மீண்டும் முன்வைத்திருக்கிறார். இந்த முறையாவது தனது கோரிக்கையை நிறைவேற்றி தாருங்கள் என இந்திரா மனுக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்காமல் மவுனம் சாதித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த இந்திரா, கலந்தாய்வு நடைபெற்ற இடத்தில் தரையில் அமர்ந்து, படுத்து உருண்டு அழுதபடியே தர்ணாவில் ஈடுபட்டார்.


இந்த விவகாரம் சர்ச்சையாகவே, இந்திராவை பணியிடை நீக்கம்செய்து முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் உத்தரவு பிறப்பித்தார். இதனைக் கண்டித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலத்தில் தலைமை ஆசிரியர் இந்திரா தரையில் அமர்ந்து, போராட்டம் நடத்தினார். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent