பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
அதிகாரம்:இன்னா செய்யாமை
திருக்குறள்:320
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
விளக்கம்:
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
பழமொழி
Hearty laugh dispels disease.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. சோம்பல் என்னை வறுமைக்கு வழிநடத்தும்.
2. எனவே தேனீ போலும், எறும்பு போலும் சுறுசுறுப்பாக இருப்பேன்.
பொன்மொழி
மெல்லினம் பழகிய பெண்டீர் வல்லினம் பழகுவது அவசியம் .துணிந்த முன்னெடுப்பும் அவசியம்----
முத்துமீனா எழுத்தாளர்
பொது அறிவு
* நாட்டின் மிகப் பெரிய பூச்சி அருங்காட்சியகம் எங்கு உள்ளது?
கோயம்புத்தூர்
* மனித உடலின் கடினமான பகுதி எது?
பற்களில் உள்ள எனாமல்
English words & meanings
Graminology – study of grasses. புல்லை குறித்து படிக்கும் அறிவியல்.
Gadder - one who travels restlessly. ஊர் சுற்றுபவர்.
ஆரோக்ய வாழ்வு
கருப்பு டீயானது மன அழுத்தத்தை தடுக்கிறது. ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது. இது கொழுப்பின் அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயத்தைக் குறைக்கிறது.
Some important abbreviations for students
SPOC - Single Point of Contact
POV - Point of view
நீதிக்கதை
எவ்வுயிரும் நம் உயிரே
ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு. அதைக் கண்களைத் திறந்த முனிவர் பார்த்தார். புன்னகை புரிந்தார்.
உனக்கு என்ன வேண்டும்? சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
அதைப் பார்த்துப் புன்னகை புரிந்த முனிவர், நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும். உனக்கு அடுத்த பிறவியில் நல்ல உயர்ந்த பிறவி கிட்டும் என்று உபதேசித்து ஆசிகூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி விடைபெற்றது.
சில நாட்கள் கழிந்தன. காட்டில் திரிந்த பாம்பு தைரியமாக ஊருக்குள் வந்தது. நாம்தான் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே. அதனால் நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.
அதனால் அந்தப் பாம்பு ஊரின் ஓரமாக உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடிக்கொண்டு இருந்தது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள். அந்த நல்ல பாம்பு யாரையும் அலட்சியம் செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது.
ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே வந்து சூ.. சூ... எனக் குரல் கொடுத்து அந்தப் பாம்பை விரட்டினர். அப்போதும் அந்தப் பாம்பு தன் வழியிலேயே போய்க் கொண்டு இருந்ததைக் கண்டு சிறுவர்களின் பயம் சற்று விலகியது. டேய், பாம்புக்குக் கண் தெரியலை போல இருக்குடா.
நம்மைப் பார்த்தும் அது ஓடாமல் மெல்லப் போகுதுடா! என்றான் ஒருவன் அதைக் கேட்ட மற்ற சிறுவர்களுக்கு பயம் அறவே நீங்கியது. பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். சில கற்கள் பாம்பின் மீது பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.
அப்போதும் பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. சற்று நேரம் சிறுவர்கள் அந்தப் பொந்தின் முன் நின்று கூச்சல் போட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
பாம்பு இரவானதும் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து தன் இருப்பிடமான காட்டை நோக்கிச் சென்றது. அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயம். ரத்தம் சிந்தும் உடலை வலியுடன் நகர்த்திக் கொண்டு சென்று முனிவர் முன் நின்றது.
அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர், என்னவாயிற்று? ஏன் இப்படி காயப்பட்டு வந்திருக்கிறாய்? என்று அன்போடு வினவினார். துக்கம் தொண்டையை அடைக்க கூறியது பாம்பு.
சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாட வந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள் என்று கூறிக் கண்ணீர் விட்டது.
அதன் பரிதாப நிலைக்கு இறங்கிய முனிவர் அதன் காயத்துக்கு மருந்து போட்டபடி பேசினார். உன்னைக் கடிக்காதே என்றுதானே சொன்னேன். நீ உன் பிறவி குணத்தைக் காட்டவேண்டியதுதானே? பாம்புக்குப் புரியவில்லை. அது என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்று கேட்டது.
ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள். நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன். உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள். சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே!
மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர். பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமைய வேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு. அதேபோல் தனக்கு தீமை ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.
இன்றைய செய்திகள்
15.11.19
* மூன்று மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
*சீனாவின் செவ்வாய்க் கிரக ஆய்வு: முதல் பரிசோதனை இன்று நிறைவு!
* புதுக்கோட்டை பெட்ரோல் பங்க்கில் ரூ.1.74 லட்சத்தைத் தவறவிட்டுச் சென்ற வாடிக்கையாளரின் பணத்தைப் பத்திரமாக உரியவரிடம் ஒப்படைத்த ஆயுள் தண்டனைக் கைதிகளை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.
*பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தண்ணீர் பருக 10 நிமிடங்கள் ஒதுக்குவது தொடர்பாக விரையில் அரசாணை வெளியிடப்படும் என, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
*லண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால், ரஷ்ய வீரர் டானிலை வீழ்த்தினார்.
* முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் அபார பந்து வீச்சினால் வங்கதேச அணி 150 ரன்களை எடுத்தது.
Today's Headlines
🌸 Tamilnadu Government has ordered the transfer of 3 districts collectors.
🌸 China's Mars Survey: First Test Completed Today!
🌸Everyone congratulated the life prisoners who are working in Pudukottai petrol bunk for handing over the 1.75 lakhs to the person who missed it in the petrol bunk .
🌸The government will issue a GO to allot students 10 minutes to drink water announced by school education department .
🌸 Star player Rafael Nadal defeats Russian player DANIIL at ATP Tennis Tournament in London.
🌸 In the first test match Bangladesh scored 150 runs only because of the skilled bowling of Indian bowlers.
Prepared by
Covai women ICT_போதிமரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக