இந்த வலைப்பதிவில் தேடு

Transfer Counselling News - ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

திங்கள், 11 நவம்பர், 2019


பதவி உயர்வு பெறுவதில் தற்போது விருப்பம் இல்லாத ஆசிரியர்களுக்கு 2023 ஆம் ஆண்டு நடத்தப்படும் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடங்கி 21-ம் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

அதில் தங்களுக்கு பதவி உயர்வு தற்காலிகமாக வேண்டாம் என்று ஆசிரியர்கள் முடிவு செய்தால் அதை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் ஏற்றுக்கொள்ளும் என்று இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

அவர்களுக்கு 2023ல் நடக்கும் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதே சமயம் இடைப்பட்ட 3 ஆண்டுகளில் பதவி உயர்வு கோரினால் அதை ஏற்க முடியாது என்றும் விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, பதவி உயர்வை மறுத்துள்ள ஆசிரியர்களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு தெரியப்படுத்த சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent