இந்த வலைப்பதிவில் தேடு

1,747 ஆசிரியர்களுக்கு சிக்கல் - கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

வெள்ளி, 20 டிசம்பர், 2019



அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களில் ‛ஆசிரியர் தகுதி தேர்வில்' (டெட்) தேர்ச்சி பெறாதவர்களின் விபரங்களை கல்வித்துறை சேகரிப்பதால், அந்த ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


கட்டாய கல்வி உரிம சட்டத்தின் கீழ், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், 2011 முதல் அடுத்து வரும் 5 ஆண்டிற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கூறப்பட்டது.

அதற்கு பின் 4 முறை தேர்வு நடத்தியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1, 747 ஆசிரியர்கள் இத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. நீதிமன்றம் தீர்ப்பு படி தற்போது வரை அரசு சம்பளம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விபரத்தை அனுப்ப பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


‛டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிவதில் சிக்கல் ஏற்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent