இந்த வலைப்பதிவில் தேடு

விபத்தில் ஆசிரியர் பலி: ரூ.1 கோடி இழப்பீடு

புதன், 11 டிசம்பர், 2019


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்த பெருவாக்கோட்டையை சேர்ந்தவர் கருணாகரன் 35.சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தார். 2017 ஆக.3 ல் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலுக்கு வந்துவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பினார். உலஊரணி அருகே சென்றபோது கார் மோதி பலியானார். அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல், விபத்தில் இறந்த கருணாகரன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 18 ஆயிரத்து 560 ஐ நஷ்ட ஈடாக வழங்க, மதுரையில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent