சூரிய கிரகணத்தால் தென் தமிழகத்தில் உள்நிழலும், வட தமிழகத்தில் வெளிநிழலும் படியும், வெற்றுக் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம்; சூரியக்கண்ணாடி வழகியாக பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூரியகிரகணத்தில், முழு, பகுதி மற்றும் வளையம் என, மூன்று வகைகள் உண்டு. வரும், டிச., 26ம் தேதி 'வளைய' சூரிய கிரகணம் நிகழ்கிறது. அப்போது, சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில், நிலவு வரும். நிலவு மறைப்பதால்,சூரியன், நெருப்பு வளையமாக காட்சியளிக்கும். அரிய நிகழ்வை, தமிழகத்தில், நீலகிரியில் துவங்கி, கோவை, திருப்பூர், ஈரோடு என, பல்வேறு மாவட்டங்களில் காண முடியும்.
இதையொட்டி, கோவை கே.பி.ஆர், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில், உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் இணைந்து, பயிற்சிப்பட்டறையை, வரும் 28ம் தேதி, காலை 9:00 மணி முதல், மாலை 4:30 வரை நடத்துகிறது; அறிவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.வானியல் குறித்த அறிவை மாணவர்கள், ஆசிரியர்கள் அறியும் வகையில், இது இருக்கும்; அனுமதி இலவசம். கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. டெலஸ்கோப் மூலம் பார்க்கலாம். எளிய உபகரணங்கள் பயன்படுத்தி காண்பது குறித்தும், பயிற்சிப்பட்டறையில் தெரிவிக்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக