இந்த வலைப்பதிவில் தேடு

இந்த மாதம் 9 நாட்கள் வங்கிகள் விடுமுறை..!

செவ்வாய், 10 டிசம்பர், 2019



டிசம்பர் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு மொத்தமாக ஒன்பது நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இருக்கும் அனைத்து வங்கிகளுக்கும், அரசு விடுமுறை நாட்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்கள் ஆகும்.


அந்த வகையில் எந்த மாதமும் இல்லாமல், இந்த டிசம்பர் மாதத்தில் 5 ஞாயிற்றுக் கிழமைகள் வருகின்றது. மேலும், டிசம்பர் 14ம் தேதி இரண்டாவது சனிக்கிழமையும், டிசம்பர் 28-ம் தேதி நான்காவது சனிக்கிழமையும் வருகின்றது.

இதற்கிடையில் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையும் வருகின்றது.


மேலும், அதற்கு அடுத்த நாளான 26ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கும் பாக்ஸிங் தினமும் வருகின்றது.

இதன் காரணமாக மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான வேலைகளை முன் கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்வது நன்மை பயக்கும். ஆனால், 26 ஆம் தேதி பாக்சிங் விடுமுறை குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. எனவே, 9 நாட்களில் 8 நாட்கள் விடுமுறை உறுதியாகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent