இந்த வலைப்பதிவில் தேடு

B.E., முடித்தால் இனி TET எழுதி ஆசிரியராகலாம் - உண்மை நிலை என்ன?

புதன், 11 டிசம்பர், 2019



🔥
🛡 B.E., முடித்தால் இனி TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) எழுதி ஆசிரியராகலாம் என்ற தகவல் செய்தி & சமூக ஊடகங்களில் இன்று (10.12.19) தீ(ய)-செய்தியாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

🔥

🛡 இது தீச் செய்தியா? தீய செய்தியா? உண்மை என்னவென்று பார்க்க தமிழக ஆசிரியர்களும், ஆசிரியப் பட்டதாரிகளும் தங்களது நினைவை 2015-ற்கு திரும்பிப்பார்க்க வேண்டும்.

🔥
🛡 ஆம். 2015-ம் ஆண்டிலேயே இந்த அறிவிப்பு வெளியாகிவிட்டது.

🔥
🛡 நாட்டில் B.E., பட்டதாரிகள் அதிகமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மையைப் போக்கும் நோக்கில், B.E., பட்டதாரிகளும் ஆசிரியர் பட்டப் படிப்பிற்கு (B.Ed.,) விண்ணப்பிக்கலாம் என்று தனது விதிகளைத் தளர்த்தி 2015-ல் அறிவிக்கை வெளியிட்டது தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE)

🔥

🛡 இதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு தமிழக உயர்கல்வித் துறை Maths, Physics, Chemistry and Computer science பாடங்களில் B.Ed., பட்டம் பெற ஏதுவாக B.E., பட்டதாரிகளுக்கு என 2016-17-ம் கல்வியாண்டு முதல் 20% இடங்களை ஒதுக்கீடு செய்து அறிவிக்கை வெளியிட்டது.

🔥
🛡 இதன்படி, 2018-19-ம் கல்வியாண்டு முதல் B.E., முடித்த பொறியாளர்களும் B.ED., பட்டத்தோடே ஆசிரியப் பட்டதாரிகளானார்கள்.

🔥
🛡 தமிழகத்தில் பெறப்படும் பல்வேறு பட்டங்களை ஒன்றை மற்றொன்றிற்கு இணையான பட்டமாகக் கருதி ஒப்புதல் அளிக்கும் பணியினை தமிழ்நாடு உயர்கல்வித்துறை ஆண்டுதோறும் அறிவிப்பது வழக்கம்.

🔥

🛡 அவ்வகையில், 6.11.2019 & 12.11.2019 தேதிகளில் கூடிய தமிழ்நாடு மாநில உயர்கல்விக் குழுவின் தீர்மானங்களின் படி சில படிப்புகளின் இணைப் படிப்புகளை நீக்கியும் சிலவற்றை புதுப்பித்தும் தமிழக உயர்கல்வித் துறை அரசாணை எண் 270-னை 3.12.19 அன்று வெளியிட்டது.

🔥
🛡 மேற்படி அரசாணையில், B.E., with B.Ed., படிப்பானது 6 - 8 வகுப்புகளுக்குக் கணிதம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு இணையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


🔥
🛡 இது 2016 முதல் நடைமுறையில் உள்ள முறை தான். இதைத் தான் தற்போது செய்தி ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க சமூக வலைதளங்களில் வெடித்துக் கொண்டிருக்கிறது.

🔥
🛡 உண்மையில், B.Sc., B.Ed., முடித்த கணித ஆசிரியப் பட்டதாரிகளே ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பின்றி இருக்க அவ்வெண்ணிக்கையை இலட்சக் கணக்காக்கும் கொள்கை முடிவாகவே இது உள்ளது.

🔥

🛡 TRB தேர்வுகள் சம்பந்தப்பட்ட பாடத்திற்கான போட்டித் தேர்வாக இருந்த வரை பலர் ஆண்டுதோறும் தேர்வெழுதி அந்தந்த பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களாகிக் கொண்டிருந்தனர்.

🔥
🛡 ஆனால் 2010-ற்குப் பின்னர், கணித ஆசிரியர் பணிக்கு அறிவியல் பாடத்தையும், அறிவியல் ஆசிரியர் பணிக்கு அவர்கள் மேல்நிலை வகுப்புகளிலிருந்தே பயிலாத கணிதப் பாடத்தையும் கட்டாயமாக்கி யாரும் தேர்வாகிவிடக் கூடாது என்பதற்காகவே வினாத்தாள்களை வடிவமைத்து ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தி வருவதால் இருப்போரே ஆசிரியராக முடியாத சூழலில்,

🔥
🛡 இலட்சக் கணக்கில் செலவிட்டு 4 ஆண்டுகள் பயின்று பட்டம் பெற்றுள்ள பொறியாளர்கள், முடிந்தால் மேலும் 2 ஆண்டுகள் படித்து B.Ed., பட்டம் பெற்று TET எழுதி கணித ஆசிரியர் ஆகிக்கொள்ளுங்கள் என்று மடைமாற்றிவிடப்பட்டுள்ளனர்.

3 கருத்துகள்

  1. ஈ ஓட்டும் B.Ed கல்லூரிகளுக்கு ஆள் பிடிக்கும் தந்திரம் இது.பாவம் பொறியியல் பட்டதாரிகள்.இந்த கபடதாரிகளின் பொறியில் சிக்கிக்கொள்ளாதீர்.

    பதிலளிநீக்கு
  2. ஈ ஓட்டும் B.Ed கல்லூரிகளுக்கு ஆள் பிடிக்கும் தந்திரம் இது.பாவம் பொறியியல் பட்டதாரிகள்.இந்த கபடதாரிகளின் பொறியில் சிக்கிக்கொள்ளாதீர்.

    பதிலளிநீக்கு

 

Popular Posts

Recent