அரசு தொடக்க பள்ளிகளில், ஆசிரியர் எண்ணிக்கை விபரங்களை தாக்கல் செய்ய, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மாணவர்களின் விகித்தாச்சார அடிப்படையில், ஆசிரியர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை விட அதிகமாக ஆசிரியர்கள் பணியாற்றுவதாக, அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, தொடக்க பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை சமன்படுத்தும் வகையில், ஆசிரியர் விபரப் பட்டியலை தாக்கல் செய்யுமாறு, தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள, மாணவர், ஆசிரியர் விகிதம் அடிப்படையில், ஆசிரியர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். ஆசிரியர்களின் பாட விபரங்களை குறிப்பிட வேண்டும். 
பள்ளியின் மாணவர் வருகைப் பதிவேடு, 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை தளம் ஆகியவற்றில் உள்ள விபரங்கள் அடிப்படையில், இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். இதற்கான பட்டியலை, வரும், 31ம் தேதிக்குள் தொடக்க கல்வி இயக்குனரகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக