இந்த வலைப்பதிவில் தேடு

நம் பாவங்களைப் போக்க கண்டிப்பாக என்ன செய்ய வேண்டும்?

செவ்வாய், 10 டிசம்பர், 2019



பூர்வஜென்மத்தில் செய்த பாவங்களும், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களும் நம்மை விட்டு போகாமல் அடுத்த ஜென்மத்திலும் தொடரும் என்று கூறுவதுண்டு.

இதனால், நமது வாழ்க்கையில் பல தடைகளும், சோகங்களும், ஏற்பட்டு மனச்சோர்வும் ஏற்படும்.


அறிந்தோ, அறியாமலோ செய்யும் இந்தப் பாவங்களைப் போக்க எளிய பூஜைகளை செய்யலாம். ஒரு சிறிய உருளியில் முக்கால் பாகத்திற்கு நல்லெண்ணெய் அல்லது நெய்யை உருக்கி ஊற்ற வேண்டும். புதிய துணியை எடுத்து அதை பெரிய திரியாக உருட்டி நெய்க்கு நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை கையில் ஏந்தி, இந்த தீபத்தில் திருப்பதி ஏழுமலையான் ஒளி வடிவில் இருப்பதாக மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை மன்னிக்கவும் என்று பெருமாளை மனதில் நினைத்துக் கொள்ளவும்.


பின்னர், துளசி மற்றும் மலர்களைத் தூவி ஏழுமலையான் குறித்த திவ்ய பிரபந்தப் பாடல்களை பாட வேண்டும். மேலும் இந்த தீபத்தை காலை முதல் மாலை வரை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தீபம் ஏற்றி முடிந்ததும், மாவிளக்கு, சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் போன்றவற்றை சாமிக்கு படைத்து, நைவேத்தியம் செய்ய வேண்டும்.


பிரார்த்தனை முடிவில் ஏழை எளிய மக்களுக்கு ஆடைகளை தானமாக வழங்க வேண்டும். இந்தப் பரிகாரத்தினால் பூர்வஜென்ம பாவங்கள் விலகி நல்ல பலன்கள் கிடைக்கும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent