இந்த வலைப்பதிவில் தேடு

இந்திய குடிமக்கள் யார்? மத்திய அரசு விளக்கம்!

ஞாயிறு, 22 டிசம்பர், 2019



'இந்தியாவில், 1987ம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களும், அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் இந்திய குடிமக்கள்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து, மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:குடியுரிமை திருத்த சட்டம் பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை.


2004ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தின் படி, ஒருவரின் தாயோ அல்லது தந்தையோ இந்தியராக இருந்தால், அவர் இந்திய குடிமகனாக கருதப்படுவார்.மேலும், 1987ம் ஆண்டுக்கு முன், இந்தியாவில் பிறந்தவர்களும், அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும், இந்திய குடிமக்களாக கருதப்படுவர். 


அசாமில் மட்டும், இது, 1971ம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்பவர்கள், அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, ஆலோசனை மற்றும் கருத்துக்கள் தெரிவித்தால், அதை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent