இந்த வலைப்பதிவில் தேடு

மதிப்புமிகு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு... ஒரு ஆசிரியரின் வேண்டுகோள்!!!

செவ்வாய், 5 அக்டோபர், 2021


இனி ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போது பள்ளி வகுப்பறைகளின் வெளிச்சுவர்களிலும்
,உட்சுவர்களிலும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்கள் மற்றும் வாக்காளர்களின் சின்னங்கள் ,பெயர்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டும் போது எளிதாக மறுபடியும் எடுக்கும் வண்ணம் குறைவான பசைகளைக் கொண்டு ஒட்டுங்கள்...



அல்லது அங்கிருக்கும் தட்டிகளில் ஒட்டி பயன்படுத்துங்கள்

வகுப்பறைகளின் வெளிச்சுவர்களிலும்,உட்சுவர்களிலும் பசை போட்டு ஒட்ட வேண்டாம்

#அதற்கு_பதிலாக......

💐 செல்லோடேப், DOUBLE SIDE STICKER கொண்டு ஒட்டவும்.

💐 அன்புள்ள ஆசிரியர்களே தேர்தல் பணி செய்யும் பள்ளியை நீங்கள் பணிபுரியும் பள்ளியாக நினைத்து சுவற்றில் பசை போட்டு ஒட்டுவதை தவிர்க்கவும்.

ஏனெனில் சுவற்றிற்கு வெள்ளையடிப்பது போன்று பசையை தடவி ஒட்டுவதால் வகுப்பறைகளில் பூசப்பட்ட வண்ணங்கள் அப்படியே பிய்ந்து வருகின்றது..




யோசித்து பாருங்கள் நம் இல்லமோ,நம் அலுவலகமோ எனில் இப்படி செய்வோமா???



தற்போது அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் பல பள்ளிகள் புத்தம் புது வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன..
அதனை வேதனைப்படுத்த வேண்டாமே😭😭😭





எப்படியும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கண்டிப்பாக ஒரு ஆசிரியர் வாக்குச்சாவடி அலுவலராக பணி புரிவர்..இதனை உணர்ந்து எடுத்துக்கூறுங்கள்



அனைத்துப் பள்ளிகளும் நம் பள்ளிகளே
நம் பள்ளிகளும் நம் வீடுகளே

பள்ளியின் அழகு கெடாமல் பார்ப்போம்

சென்ற தேர்தல் நிகழ்வில் ஒட்டப்பட்ட சில புகைப்படங்களை இங்கே பதிவிட்டு இருக்கிறோம்

இதுபோல் இந்த தேர்தலில் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு இருகரம் கூப்பி வேண்டுகிறோம்

அரசுப்பள்ளிகளை நாம் காக்கா விட்டால் வேறு யார் காப்பார்

தேர்தல் பணியை சிறப்பாக செய்து முடித்துவிட்டு மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு பத்திரமாக திரும்ப வாழ்த்துக்கள்

பள்ளிக்காக ஒரு ஆசிரியரின் வேண்டுகோள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent