இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களே!!! முதலில் நாம் இதனை செய்வோம்!!!

சனி, 21 டிசம்பர், 2019



இரவெல்லாம் கொசுக்கடியில் கொஞ்ச நேரம் கூட தூங்க முடியவில்லை..


கழிப்பறை சுகாதாரமாக இல்லை..
குழாய்களில்  தண்ணீர் வராமல் சரியாக குளிக்கக்கூட முடியவில்லை..

மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் தீர்ந்துவிட்டது..  யாரை தொடர்பு கொள்வது என தெரியவில்லை.

இருக்கின்ற சேர் டேபிள் உள்ளிட்டவற்றை பள்ளி அலுவலக  அறையில் வைத்து பூட்டி சென்றுவிட்டனர்..

போதிய மின்சார விசிரி வசதியில்லை....

மொபைல் போன் சார்ஜ் போட பிளக் பாயிண்டில் மின்சாரம் வரவில்லை.. 

புதிய இடம்.. உணவு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு உள்ளூரில் யாரை தொடர்பு கொள்வது என கூட தெரியவில்லை..

வந்திருக்கும் பெண் அலுவலர்கள் குளித்து ரெடியாக ஏதேனும் பாதுகாப்பான வீடோ.. வேறு இடமோ பக்கத்தில் இருக்குமா..! தெரியவில்லையே.. 

பணி முடிந்து தாமதமான இரவில் ஊர் திரும்ப இங்கிருந்து செல்ல கடைசி பஸ் எத்தனை மணிக்கு.. ! யாரிடம் கேட்டால் சரியான தகவல் கிடைக்கும்..? 

*இப்படி பல பிரச்சினைகளை.. கடந்த பல தேர்தல்களில்  நம்மில் பலரும் அனுபவித்திருப்போம்...*

இதே அனுபவங்கள் நமது பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு கூட நிகழ்ந்திருக்கலாம் அல்லவா..??

*இந்த கசப்பான அனுபவங்கள் நமக்கோ மற்ற நம் சக ஆசிரியர்களுக்கோ இனிமேல் வேண்டாம் தானே..?!*


*அப்படி எனில் இந்த தேர்தலில் சில விஷயங்களை முன்னெடுப்போம்..*

தேர்தல் பணிக்காக வெளியூருக்கு நாம் புறப்படுவதற்கு முன்பு..

இந்த வாரமே.. நம் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 தேவையுள்ள.. அடிப்படையான மராமத்து பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கழிப்பறை சுகாதாரம்.. சுற்றுப்புறத் தூய்மை..

போதிய குடிநீர், குழாய் நீர், மின்விசிறி.. வாக்குச்சாவடியில் (அதாங்க .. நம்ம பள்ளியில்) தேவையுள்ள அனைத்து பகுதிகளுக்கும் விளக்கு வசதி.. 

குடிநீரோ மின்சாரமோ தடைப்பட்டால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்..?? 
அருகில் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏதேனும் வசதி, வாய்ப்புகள் உள்ளனவா..? உள்ளதெனில் அதற்கான தொடர்பு எண்கள், அவசரத் தேவைக்கு அந்த பள்ளியின் தலைமையாசிரியர் அல்லது மற்ற பொறுப்பாசிரியரின்  தொடர்பு எண்கள். 

இன்ன பிற விவரங்களை தெளிவாக எழுதி.. அந்த வாக்குச் சாவடி கரும்பலகையில் ஒட்டி வைக்கலாமே..!


நம் பள்ளி (வாக்குச் சாவடி) அருகில் உள்ள பொறுப்பான நம் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் அல்லது PTA தலைவர்கள் இருந்தால்.. அவர்களிடம் புதிதாக வரும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு (அதாங்க நம் சக ஆசிரியர்களுக்கு..) தேவையான அடிப்படை உதவிகளை இயன்றளவு செய்யும் படி பணிவோடு அன்பு கட்டளையிடுவோம். (அப்படி இருப்பின் அவர்களது தொடர்பு எண்களையும் சேர்த்து குறிப்பிடலாம்.)

*Smooth and happy elections.*

1 கருத்து

 

Recent