இந்த வலைப்பதிவில் தேடு

பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க, இந்த விதிகளைப் பின்பற்றுங்கள்...

புதன், 5 பிப்ரவரி, 2020





1.  *யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள்

2. *பள்ளியில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பள்ளி கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பள்ளிக்கோ சுமந்து வர வேண்டாம்.


3. *சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பள்ளியிலிருந்து செல்லுங்கள்.

4.  *நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள்.  அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

5. *எதையுமே எதிர்பார்க்காதீர்கள்.  யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள்.   உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள்.

6. *பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் அதற்கு அங்கிகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள்.  கிடைக்காவிட்டால் பரவாயில்லை.  உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்

7.  *எப்பொழுதும் பள்ளியை கட்டிக்கொண்டு அழாதீர்கள். குறிப்பாக EMIS. வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.


8. *நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள்.  ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள் நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.

9.  *அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள்.  எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.

10. *இறுதியில் நம் குடும்பம், நண்பர்கள், வீடு, ஆழ் மன அமைதியை விட எதுவும் பெரிதில்லை.

2 கருத்துகள்

 

Popular Posts

Recent