ஸ்பெயினில் கடந்த 15 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் வெரோனிகா டுகியூ. இவர், மாணவர்களுக்குக் கற்பித்தலில் புதுமையைப் புகுத்த வேண்டும் என்று நினைப்பவர். அதோடு காலத்துக்கு ஏற்றவாறு மாணவர்களை மேம்படுத்த வேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வமுடையவர். கண்டிப்புடன் கூடிய வகுப்பறை கல்வி மட்டும் எப்போதும் ஒரு மாணவரை உயர்த்திவிடாது என்பதில் தெளிவுடனுள்ள வெரோனிகா டுகியூ, "ஒரு பாடம் மாணவர்களுக்குப் புரியவில்லை" என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறுகிறார்.
அதற்குக் காரணம், "மாணவர்களுக்குப் புரியும்படி ஆசிரியர்கள் நடத்தவில்லை" என்ற வாதத்தையும் அவர் முன்வைக்கிறார். அதே நேரத்தில் மாணவர்களுக்கு வகுப்பறை கலகலப்பாக இருக்க வேண்டும் என்பதையும் பதிவு செய்கிறார்.
ஓர் ஆசிரியர் தனது வகுப்பு பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில் பாடங்களை பல ஆண்டுக் காலமாக நடத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் உயிரியல் பாடத்தைப் பற்றி தனது வகுப்பு மாணவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதால், அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், மனித உறுப்புக்களை ஆடையாக அணிந்து வந்து பாடம் நடத்தியுள்ளார்.
மனித உறுப்புகள் தெளிவாக வரையப்பட்ட ஆடையில் உள்ள பாகங்களைச் சுட்டிக்காட்டி உயிரியல் பாடங்களை மாணவர்களுக்கு விளக்குகிறார். இப்படி, கற்பித்தல் முறையில் புதுமையைப் புகுத்தும் தன் மனைவியின் நடவடிக்கையைக் கண்ட அவரின் கணவர், அதைப் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 'என் மனைவியின் நடவடிக்கைளைக் கண்டுபிரமிக்கிறேன்' என்று அவர் பாராட்டியுள்ளார்.
ஆசிரியர் வெரோனிகா டுகியூவின் கற்பித்தல் முறை' தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகியுள்ளது. அதற்கு, இதுவரை 13,000 கமென்டுகள் மற்றும் 67,000 லைக்ஸையும் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக