இந்த வலைப்பதிவில் தேடு

குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் பணிபுரியலாம் - தமிழக அரசு குழந்தை தொழிலாளர் சட்டத்தில் திருத்தம்

திங்கள், 30 டிசம்பர், 2019



கல்வி பாதிக்காத வகையில் குழந்தைகள் குடும்பத்துக்கு பண ரீதியாக உதவும் வகையில் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தை நட்சத்திரமாக பணிபுரிவது குறித்த விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.



இந்தியா முழுவதும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுவத்துவதை தடை செய்யும் வகையில் குழந்தை தொழிலாளர் சட்டம் உருவாக்கப்பட்டது. இவர்கள் பணியில் இருந்தால் மீட்பதும், அவர்களுக்கு கல்வி அளிப்பதும் குழந்தை தொழிலாளர் நல அமைப்பின் இலக்கு. இதன்படி தமிழகத்தில் உள்ள 15 மையங்களில் 290 சிறப்பு மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த மையங்களில் 6162 குழந்தைகள் படித்துவருகின்றனர். 2018 - 2019ம் ஆண்டில் 2463 குழந்தைகள் முறையான பள்ளிகளில்   சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மத்திய அரசு திருத்திய குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துல்) சட்டத்தை உருவாக்கியது. இந்த சட்டத்தின் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் அடிப்படையாக கொண்டு தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 



இந்த புதிய திருத்தத்தில், குழந்தை தொழிலாளர் சட்டம் தொடர்பாக தொலைக்காட்சி, வானொலி, இணையதள அடிப்படையிலான செயலி, அச்சு ஊடகம், காட்சி ஊடகம், நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய ஊடகம், ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள்,  சுங்கச்சாவடிகள், பொருட்காட்சிகள், பெரு வணிக வளாகங்கள், கண்காட்சிகள்,  பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூலம் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் செய்யலாம்.  

குறிப்பாக குழந்தையின் கல்வி பாதிக்காத வகையில் குடும்பத்திற்கு உதவிட இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அபாயகரமான தொழில் செய்யக் கூடாது. பள்ளி நேரங்களில் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணி செய்யக் கூடாது. 

குழந்தையின் உரிமை மற்றும் கல்வி சார்ந்த செயல்பாடுகளை பாதிக்க கூடாது. குடும்பத்தில் உள்ள வயதுவந்த நபருக்கு பதிலாக குழந்தையை பணியமர்த்த கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு குழந்தை அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய முடியும். குழந்தைகளை விளம்பர படம் உள்ளிட்டவற்றில் குழந்தை நட்சத்திரமாக பணியாற்ற நிகழ்ச்சி தயாரிப்பாளர் அந்த மாவட்டத்தின் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அதில் அந்த துன்புறுத்தபடவில்லை என்று உறுதி மொழி அளிக்க வேண்டும். அனுமதி பெற்றபின்னர் ஒரு நாளில் 5 மணி நேரத்திற்கு மேல் மற்றும் ஓய்வின்றி 3 மணி நேரத்திற்கு பணியாற்ற அனுமதி வழங்க கூடாது.

குழந்தை தொழிலாளர் தொடர்பான ஆய்வுகளை முறையாக நடத்த ஆய்வு முறை ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இந்த சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்திற்கு எதிராக, குடும்பம் அல்லது குடும்ப நிறுவனத்தில் பணிகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் தகவல், மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கை, அபராதத் தொகை, மறுவாழ்வு தகவல் தொடர்பான விவரங்கள் பராமரிக்க வேண்டும். இதைத்தவிர்த்து குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தினர் தொழிலாளர் மறுவாழ்வு நிதியிலிருந்து மறு வாழ்வு நிதி வழங்குதல்,  வயதுச் சான்றிதழ், குற்றங்களை இணக்கமாக தீர்த்துக் கொள்ளும் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் இந்த சட்டத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.



* சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி பாடத்தில் இது தொடர்பான விதிகளை சேர்க்கலாம்.
    
* படிக்கும் குழந்தை முறையான அனுமதி இல்லாமல் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு பள்ளிக்கு வராமல் இருந்தால் தலைமை ஆசிரியர் மாவட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* குழந்தை நட்சத்திரத்தில் ஈட்டபட்ட வருமானத்தில் 20 சதவீதம் வங்கி வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு உரிய வயது வந்த பின்னர் அந்த குழந்தையிடம் அளிக்கலாம்.

* ஆய்வாளர் மேற்கொள்ளும் ஆய்வு தொடர்பாக 3 மாதத்திற்கு ஒரு முறை அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

மாவட்டந்தோறும் சிறப்பு பணி பிரிவு புதிய விதிகளை செயல்படுத்த மாவட்டம்தோறும் சிறப்பு பணி பிரிவு உருவாக்க வேண்டும். இந்த பிரிவு மாதத்திற்கு ஒரு முறையாவது கூடி மீட்பு நடவடிக்கை, திடீர் சோதனை, இடைக்கால நிவாரணம் குறித்து  விரிவான திட்ட நடவடிக்கை உருவாக்க வேண்டும். இது தொடர்பான குறிப்புகளை வலைதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent