இந்த வலைப்பதிவில் தேடு

ஊதிய முரண்பாடுகளை களைய புதிய குழுவா? சித்திக் ஒருநபர் குழு அறிக்கை என்னவாயிற்று? ஆசிரியர்கள் அதிருப்தி!!

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதில், முரண்பாடுகள் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், போராட்டங்களை நடத்தின.


இதையடுத்து, ஊதிய உயர்வில் உள்ள, குறைபாடுகளை களைவதற்காக, நிதித்துறை செலவினங்கள் முதன்மை செயலர் சித்திக் தலைமையில், ஒரு நபர் குழுவை, தமிழக அரசு நியமித்தது.இக்குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேசியது; அவர்கள் அளித்த, கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது. 


ஜனவரி 5 ஆம் தேதி
குழுத் தலைவரான சித்திக், ஒரு நபர் குழு அறிக்கையை, முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார். ஆனால் இன்றுவரை அந்த அறக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது புதிதாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து என்ன பயன் என்று ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent