அரசு ஊழியர்கள் 30 ஆண்டு பணியாற்றினால் அல்லது 50 வயது முடிவடைந்தால், அவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு வேலைவாய்ப்பு துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது கட்டாய ஓய்வு அளிப்பதற்கான திட்டமா என்று அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் 30 ஆண்டு பணிபுரிந்தவர்கள் அல்லது 50 வயது நிறைவடைந்தவர்கள் பட்டியல் சேகரிக்கப்படுவது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் தவறானதாகும்.
30 ஆண்டு அல்லது 50 வயதானவர்களின் பணித்திறன் குறித்து ஆய்வு செய்யப்படும். அதில் அவர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டு இருந்தாலோ அல்லது பணி செய்ய முடியாத நிலையில் இருந்தாலோ விருப்ப ஓய்வு பெற அறிவுரை வழங்கப்படும். அதனால் அரசு ஊழியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக