இந்த வலைப்பதிவில் தேடு

Fast Tag எப்படி, எங்கே வாங்குவது?

வியாழன், 19 டிசம்பர், 2019



கடந்த, 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான 'பாஸ்டேக்' முறை ஜன., 15 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதுகுறித்த முக்கிய அம்சங்கள்:'பாஸ்டேக்' எங்கே பெறுவது? அனைத்து வங்கிகளின் இணையதளங்கள், 'அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால்' ஆகியவற்றில் பெற முடியும்.


இது தவிர வங்கிகளின் விற்பனை அலுவலகங்கள், சுங்கச்சாவடிகள், சேவை மையங்கள், சுங்கச்சாவடி கட்டுப்பாட்டு மையங்கள், சில பெட்ரோல் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலை மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றிலும் பெற முடியும்.தேவைப்படும் ஆவணங்கள் 'பாஸ்டேக்'களை வங்கி கணக்குகளுடன் இணைத்து, கே.ஓய்.சி., அளித்து பெறலாம். புதிய வாகனங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்கும் போதே, 'பாஸ்டேக்' விண்ணப்பத்தையும் அளிக்க வேண்டும். கட்டணம் எவ்வளவு கட்டணமாக ரூ.100, பிணைத் தொகையாக, 200 ரூபாய் செலுத்த வேண்டும். இது ஒருமுறைக்கான தொகை மட்டுமே. 

இந்த தொகை, உங்களின் கணக்கில் இருந்து கழிக்கப்பட்ட பிறகு, மீண்டும், 'ரீசார்ஜ்' செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சமாக, 200 ரூபாய்க்கு, 'டாப்- அப்' செய்ய வேண்டும்.எப்படி டாப்-அப் செய்வது?'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யூபிஐ', காசோலை உள்ளிட்ட வழிகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 


'மைபாஸ்டேக்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.காலக்கெடுரீசார்ஜ் செய்த தொகைக்கு காலாவதி தேதி கிடையாது. பழைய, 'பாஸ்டேக்' பயன்படுத்த முடியுமாகடந்த, 2017 ம் ஆண்டிற்கு பிறகு வாங்கப்பட்ட புதிய வாகனங்களுக்கு, அதன் பின் இணைக்கப்பட்ட 'பாஸ்டேக்' தான் செல்லும். அதை தவற விட்டிருந்தால், தேசிய நெடுஞ்சாலை உதவி எண்களை தொடர்பு கொண்டு மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

செலுத்திய கட்டணத்தை தெரிந்து கொள்வது எப்படிஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடி கட்டணம் உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்படும் போதும், நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வரும். உங்களின், 'பாஸ்டேக்' கணக்கில் மீதமுள்ள தொகை குறித்த தகவலும் தெரிவிக்கப்படும்.தொகை குறைந்தால்...


வங்கிக்கணக்கு அல்லது இணையம் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியுமாதற்போது அத்தகைய வசதி கொண்டு வரப்படவில்லை. புதிய வங்கி கணக்குடன் உங்களின், 'பாஸ்டேக்' இணைக்க விரும்பினால், பழைய, 'பாஸ்டேக்' ஐ முற்றிலுமாக ரத்து செய்து விட்டு, புதிதாக பாஸ்டேக் வாங்கி, புதிய கணக்குடன் இணைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent