இந்த வலைப்பதிவில் தேடு

தேர்தல் பணிக்கு IFHRMS மூலமாக விவரங்கள் சேகரிப்பு - ஆசிரியர், ஊழியர்களுக்கு சிக்கல்.

திங்கள், 2 டிசம்பர், 2019




தகவல்:


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்கள் உடல்நலம் பாதித்தவர்கள்
மாற்றுதிறனாளிகள் மகப்பேறு அரசு ஊழியர்கள் தமிழக உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழக அரசிடம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியாதவது:


வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த உள்ளனர். அதற்கான பணிகள் உள்ளாட்சி அலுவலகம் மூலம் தீவரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தும் வகையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (IFHRMS)இயங்கும் மாவட்ட கருவூலமாக அனைத்து அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பெயர் பட்டியலை பெற்று பணியாணை வழங்கப்பட உள்ளது.
இதற்கு முன்பு அந்தந்த துறை மூலமாக பெயர் பட்டியலினை பெற்று பணியில் ஈடுபடுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை கைவிடப்பட்டுள்ளது.


இதில் என்ன பாதிப்பு என்னவென்றால், மாற்றுதிறனாளிகள், மருத்துவ சிகிச்சை பெருபவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பு அடைவார்கள்.
முன்பு துறை சிகிச்சை பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மருத்துவ சான்று வழங்கியும்,  மாற்றுதிறனாளிகள் உன்மை சான்று சமர்பித்தும், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற முடியும். ஆனால், தற்போது யாரை அணுகுவது என்பது பெரும் குழப்பமாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது.  எனவே, தேர்தல் ஆணையம் உடல் நலம் பாதித்தவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை மூலம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent