இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 10.12.2019

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்


 டிசம்பர் 10

மனித உரிமைகள் தினம்

திருக்குறள்

அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:340


புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

விளக்கம்:

உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

பழமொழி

A good reputation is a fair estate

 நற்குணமே சிறந்த சொத்து.

இரண்டொழுக்க பண்புகள்

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

 2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி

வெற்றி என்பது நிரந்தரமல்ல
 தோல்வி என்பது இறுதியானதுமல்ல
            - பில் கேட்ஸ்

பொது அறிவு


1. மாங்கனி நகரம் எது?

 சேல‌ம்

2. மஞ்சள் நகரம் எது?

ஈரோடு

English words & meanings

Botany – study of plants. தாவரவியல்.இது தாவரங்களின் வாழ்க்கையை பற்றி படிக்கக் கூடிய அறிவியலாகும்.

Balanced - different things exist in equal. வெவ்வேறான பொருள்கள்சரியான அளவுகளில் அமையுமாறு சமநிலை காத்தல்.

ஆரோக்ய வாழ்வு

 பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது.

Some important  abbreviations for students

 Rev.  -  Revelation;
the Reverend

rev.  -   revised

நீதிக்கதை

தைரியம்

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.

திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரசசபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.


பிச்சைக்காரன் கலங்கவில்லை கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது.

ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக்காரனை விடுவித்தான். தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

இன்றைய செய்திகள்


10.12.19

*புதுடில்லி: கல்வி கடன்களை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

* பின்லாந்தில் 34 வயதான சன்னா மரின் என்ற பெண் அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 * தமிழகத்தில் வசிக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது.

* சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர்பதிவுகளுக்கு நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

* தெற்காசிய விளையாட்டு பெண்கள் கபடியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. பெண்கள் கால்பந்திலும் இந்திய பெண்கள் அசத்தினர்.

*`X1 ரேஸிங் லீக்’- கார் ரேஸில் மும்பை, பெங்களூரு அணிகள் அசத்தல்; சிங்கிள் காருடன் போட்டியிட்ட சென்னை அணி.

Today's Headlines

🌸 There is no idea of cancelling the education loan declared center finance minister Nirmala Seetharaman.

🌸 34 year old Sanna Mariin from Finland became the PM. Receiving congratulations from everywhere.

🌸 Refugees of Srilangan Tamilians won't get citizenship.

🌸 The result for the exams conducted for High officers grade Group 1 released in online.

🌸  In South Asian Athletic meet India won gold for Women Kabadi. They played marvellously in foot  ball also.

🌸 XI Racing League - Bangalore and Mumbai team did marvellously : Chennai team joined the stream with a single car

Prepared by
Covai women ICT_போதிமரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent