2020 ஆம் பிறக்கப்போகிறது. புத்தாண்டில் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கலாம். பிறக்கப் போகிற ஆண்டு சந்தோஷமான ஆண்டாக அமைய வேண்டுமே என்று அனைத்து ராசிக்காரர்களும் விரும்புகின்றனர். சில ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள், கவலைகள் சூழ்ந்திருக்கிறது. நமக்கு விடிவுகாலம் பிறக்குமா என்று யோசிப்பீர்கள்.
உங்களின் கேள்விகளுக்கு இந்த புத்தாண்டு பதில் சொல்லப்போகிறது. சனியின் சஞ்சாரம், குருவின் கோச்சார ரீதியான சஞ்சாரமும் அவர்களின் சொந்த வீடுகளில் அமைந்துள்ளதால் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் அபரிமிதமாக கிடைக்கப் போகிறது. உங்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கும், பரிகாரங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி நகர்கிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் ஆண்டு இறுதியில் தனுசு ராசியில் இருந்து குரு பகவான் மகரம் ராசிக்கு சென்றடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.
2020ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் உள்ள ராகு 18.09.2020 அன்று இரவு 8.45 மணி ரிஷப ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 30ஆம் தேதியன்று அதிசாரமாக மகரம் ராசிக்கு செல்கிறார். ஜூன் 30ஆம் தேதிவரை மகரம் ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு வரும் குருபகவான் நவம்பர் வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார். நவம்பர் 20ஆம் தேதியன்று நேர்கதியில் மகரம் ராசிக்கு செல்கிறார். இது பொதுவான பலன்கள்தான் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் தசாபுத்தியின்படி நன்மை தீமைகள் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேஷம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதம். குரு பாக்யம், விரைய ஸ்தான அதிபதி. அவர் ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார் அப்புறம் பத்தாம் வீட்டிற்கு வருகிறார். குருவினால் இன்பங்கள் அதிகரிக்கும். மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் வாழ்க்கை வசந்தமாகும் பணவரவு அற்புதமாக இருக்கும். பெண்களுக்கு உற்சாகமாக ஆண்டு நிறைய நகைகள் வாங்குவீர்கள்.
மாணவர்களுக்கு இது அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. நன்றாக படித்து முடித்து அரியர்ஸ் எல்லாம் கிளியர் செய்து டிகிரி வாங்குவீங்க. இந்த புத்தாண்டில் நீங்க அதிகமாக மஞ்சள், இளம் சந்தன நிற ஆடைகளை உபயோகிங்க நல்லது நடக்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். உங்க தசாபுத்தியும் நன்றாக இருந்தால் உங்களக்க இது அதி அற்புதமான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேசமில்லை. ஆலய தரிசனம் அற்புத பலன்களை தரும் வாலாஜா பேட்டையில் அருள்பாலிக்கும் சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள் சங்கடங்கள் தீரும்.
ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு நிறைய லாபம் வரும் ஆனாலும் கடும் போராட்டம் இருக்கும். நீண்ட நாளாக தடை பட்டிருந்த காரியங்கள் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் அதிகம் வாங்குவீங்க. நிறைய சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீங்க. வெற்றி மேல வெற்றி வந்து உங்களை திக்குமுக்காட வைக்கும்.
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும். வியாபாரம் தொழிலில் லாபம் வரும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்கள் கறுப்பு, நீலம் ஆடைகளை அதிகம் பயன்படுத்துங்க நன்மை. சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருள்பாலிக்கும் குரு தட்சிணா மூர்த்தியை குரு ஹோரையில் தரிசனம் பண்ணுங்க நல்லதே நடக்கும்.
மிதுனம்
புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஆண்டின் துவக்கத்தில் எட்டில் சனி, ஏழில் குரு இருந்தாலும் சந்தோஷமான ஆண்டாக அமைகிறது. காரணம் குருவின் சஞ்சாரம், பார்வையினால் பொன்னான ஆண்டாக அமைகிறது. ரொம்ப சிறப்பான ஆண்டு. பெண்களுக்கு சொந்த வீடு கிடைக்கும். தம்பதியர் இடையே நெருக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு அற்புதமான ஆண்டு நன்றாக படிப்பீங்க. தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு பட்டங்கள் பதவிகள் தேடி வரும். நிறைய சொத்து சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க ஆரோக்கியம் அதிகரிக்க வாலாஜாபேட்டையில் எழுந்தருளியிருக்கும் தன்வந்திரி பகவானை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.
கடகம்
சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு ஆண்டின் துவக்கத்தில் ஆறாம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார். அப்புறம் ஏழாம் வீட்டிற்கு அதிசாரமாக சென்று பின்னர் வக்ரமடைந்து ஆண்டின் இறுதியில் நேர்கதியில் ஏழாம் வீட்டில் அமர்கிறார். சில மாதங்கள் குருவின் பார்வை உங்க ராசிக்குக் கிடைக்கும். குரு பகவானால் சில தீமைகள் ஏற்பட்டாலும் அதிகமான அளவில் அற்புதமான வெற்றிகளை தருவார். சனிபகவான் ஏழில் அமர்கிறார். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மாணவர்களுக்கு பெற்றோர்களின் அனுசரணை கிடைக்கும். வியாபாரிகளுக்கு ரொம்ப லாபமான வாரம்.
அற்புதமான ஆண்டாக அமைகிறது. தொழில் வியாபாரிகளுக்கு ஆரம்பத்தில் அற்புதமாக இருக்கும். ஆண்டு மத்தியில் சில தடைகள் ஏற்பட்டாலும் ஆண்டில் இறுதியில் தடைகளை தாண்டி முன்னேற்றம் ஏற்படும். வயலட் நிற ஆடைகளை அதிகம் அணியுங்கள் நல்லதே நடக்கும். பவுர்ணமி பூஜை பண்ணுங்க மன கலக்கங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, 2020ஆம் ஆண்டு உங்களுக்கு குதூகலம் நிறைந்த ஆண்டாக அமைகிறது. உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சனிபகவானும் பஞ்சம ஸ்தானத்தில் குரு பகவானும் சஞ்சரிப்பதால் உங்க வாழ்க்கை உயர்நிலையை அடையும். இந்த ஆண்டு உங்களுக்கு சின்ன சின்ன நோய்கள் எட்டிப்பார்த்தாலும் உங்களுக்கு பெரிய அளவில் செலவுகளோ பாதிப்புகளோ வராது கவலைப்பட வேண்டாம். பிள்ளைகளால் உங்களுக்கு அதிகம் நன்மைகள் நடக்கும்.
வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்கள். வேலை செய்பவர்கள் குடும்பத்தோடு உல்லாச பயணம் செல்வீர்கள், பண வரவு அபரிமிதமாக இருக்கும். சொந்த பந்தங்களுடன் இருந்த பகை நீங்கும். உங்களுக்கு எதிரிகள் தொல்லை ஒழியும் இந்த ஆண்டு அதிக அளவில் மஞ்சள், நீல நிற ஆடைகளை அணியுங்கள். தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி
2020ஆம் ஆண்டு மேன்மையான ஆண்டாக அமைகிறது. நீண்ட நாள் கனவு நனவாகும். உங்க திட்டங்களை செயல்படுத்துவீர்கள். காரணம் அர்தாஷ்டம சனி இடம் மாறி ஐந்தாம் வீட்டிற்கு செல்வது சிறப்பு. குருவும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிக்கிறார். பெண்களுக்கு கணவர் மூலம் பரிசுகள் கிடைக்கும். உங்க அன்புக்கு உரியவர் இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் கொடுப்பார். நகைகள், ஆடைகள் வாங்குவீர்கள்.
இளம் பெண்கள் சிலர் கணவர் உதவியால் தொழில் முனைவோர்களாக மாறுவீர்கள். நினைத்தது அதிகம் நிறைவேறும் மாணவர்களுக்கு அற்புதமான ஆண்டு. படித்து முடித்து கல்லூரிகளில் இருந்து வெற்றிகரமாக வெளியேறுவீர்கள். சிலருக்கு உயர்கல்வி யோகம் அமையும். மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட நிறங்கள்.
புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு போய் துளசி மாலை போட்டு வழிபடுங்க நன்மைகள் நிறைய நடக்கும்.
துலாம்
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு லாப கரமான ஆண்டாக அமையும். பங்கு சந்தை, ரேஸ், லாட்டரி மூலம் பண வருமானம் அதிகம் வரும் மன உற்சாகத்தோடு இருப்பீங்க. மாணவர்களுக்கு முன்னேற்றகரமான ஆண்டு. பெண்களுக்கு உற்சாகமான ஆண்டு கணவர் உங்களுக்காக நிறைய செலவு செய்வார். தம்பதியரின் ஒற்றுமை சந்தோஷத்தை அதிகரிக்கும். குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும், சனியின் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் ஆண்டு முழுவதும் திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நீங்க அதிகம் இந்த ஆண்டு இளம் பச்சை, வெண்மை நிற ஆடைகளை அணியுங்கள் நல்லது நடக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு போய் சுக்கிர ஓரையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்க நல்லதே நடக்கும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த 2020ஆம் ஆண்டு உங்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. இத்தனை ஆண்டுகளாக சிக்கல்களை சந்தித்து கடுமையான சவால்களுடன் வாழ்க்கையை ஓட்டி வந்தீர்கள் இனி உங்களுக்கு சந்தோஷமான ஆண்டாக பிறக்கப் போகிற புத்தாண்டு அமைகிறது. காரணம் குருபகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன வாக்கு ஸ்தானத்திற்கு மாறியிருக்கிறார்.
குடும்பம் குதூகலமாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பெண்களுக்கு முக்கியத்துவமான ஆண்டாக அமைகிறது. படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாடு போகும் யோகம் வரப்போகிறது. ஏழரை சனி முடிந்து சனிபகவான் மூன்றாம் வீட்டிற்கு நகர்வது அற்புதமான அம்சம். மொத்தத்தில் 2020ஆம் ஆண்டில் இருந்து உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கப் போகிறது. செவ்வாய் கிழமை முருகனை வணங்கி வாருங்கள். அறுபடை வீடு தரிசனம் மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் அற்புதங்களை ஏற்படுத்தும்.
தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, 2020ஆம் ஆண்டு உங்களுக்கு வெற்றிகளும் சந்தோஷங்களும் நிறைந்த ஆண்டாக அமையும். நீங்க நினைத்த காரியங்கள் எல்லாம் மளமளவென முடிந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கை கூடி வரும் உங்க ராசியில் ஜென்ம குருவாக அமர்ந்துள்ள ராசி நாதன் குரு பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டினை பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும். ஏழரை சனியின் பாதிப்பு இருப்பதால் உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
மகரம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு சின்னச் சின்ன சங்கடங்களையும் சில நேரங்களில் சந்தோஷத்தையும் தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. ஏழரை சனியின் தாக்கம் ஜென்ம சனியாக தொடர்கிறது. அதோடு குருவும் விரைய குரு, ஜென்ம குரு என உங்களை சில நேரங்களில் சங்கடப்படுத்துவார்.
உங்களின் விடா முயற்சி வெற்றிகளை தரும். அலுவலகத்தில் வேலை செய்யும் ஆண்கள் பெண்கள் விசயத்தில் கவனமாக இருங்க. அதே போல இளம் பெண்கள் ஆண்களிடம் எச்சரிக்கையாக இருங்க, பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் கவனமாக இருங்க, மன அழுத்தம் வர வாய்ப்பு இருக்கு ஆலய தரிசனம் அவசியம் செய்ய வேண்டும். தொழில் வியாபாரிகள் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம் தவிர்த்து விடுங்கள்.
கும்பம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. மனதிலும் உடம்பிலும் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடியும். இந்த ஆண்டு புதிய பிசினஸ் தொடங்கலாம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நிறைய சர்ப்ரைஸ் பரிசுகள் கொடுத்து அசத்துவார் உங்க கணவர்.
பிள்ளைகள் உங்கள் மீது பாசமழை பொழிவார்கள். இளைஞர்களின் கல்யாண கனவுகள் நனவாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். நீங்க இந்த ஆண்டு முக்கியமான விசயங்களை பேசும் போது நல்ல காரியங்களை செய்யும் போது கரும் பச்சை நிற ஆடைகளை அணியுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே இந்த ஆண்டு சனிபகவான் சஞ்சாரமும், குரு பகவான் சஞ்சாரமும் உங்களுக்கு ரொம்ப சாதகமாக இருக்கிறது. தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கும். குரு பத்தாம் வீட்டில் கேது உடன் இணைந்து நான்காம் வீட்டில் உள்ள ராகுவின் பார்வையில் இருப்பதால் நன்மைகளும், சந்தோஷங்களும் அதிகம் கிடைக்கும். மனதளவிலும் உடல் அளவிலும் தெம்பும் தைரியமும் கூடும். மிகப்பெரிய உயரங்கள் கிடைக்கும். சமூகத்திலும் சமுதாயத்திலும் அந்தஸ்து அதிகரிக்கும். படிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையும். தொழில் வியாபாரிகளுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். ப்ரௌன் நிற ஆடைகளை அதிகம் அணியுங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக