இந்த வலைப்பதிவில் தேடு

குடியரசு தினத்தில் தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

திங்கள், 27 ஜனவரி, 2020



குடியரசு தினவிழாவில் பள்ளிக்கு வராத தலைமையாசிரியர் உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.



துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதுார் ஒன்றியம், எஸ்.குமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக ராஜா, ஆசிரியையாக பாக்கியசெல்வி பணியாற்றுகின்றனர். 

நேற்று காலை இருவரும் பள்ளியில் குடியரசு தினவிழாவிற்கு வரவில்லை. மாணவர்கள் வந்து காத்திருந்தனர்.நேற்று அந்த பள்ளியில் ரூ 14.50 லட்சத்தில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு பகல் 11:30 மணிக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ.,சின்னப்பன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் வந்தனர்.



அதுவரை பள்ளியில் தேசிய கொடியேற்றப்படாமல் இருப்பதை அறிந்த எம்.எல்.ஏ., சின்னப்பன், கல்வித்துறை அதிகாரிகளிடம் போன் செய்து ஆசிரியர்கள் வராதது குறித்து தெரிவித்தர். பின்னர் அவரே பள்ளியில் தேசிய கொடியேற்றி வைத்தார். 

புதிய கட்டட அடிக்கல் விழாவிலும் பங்கேற்று திரும்பினார்.பள்ளி குடியரசு தின விழாவில் பங்கேற்காத தலைமையாசிரியர் ராஜா, ஆசிரியர் பாக்கியசெல்வி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கோவில்பட்டி கல்வி அலுவலர் மாரியப்பன் உத்தரவிட்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent