இந்த வலைப்பதிவில் தேடு

5, 8ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு மையங்கள் மாற்றப்படாது- அமைச்சர் செங்கோட்டையன்

செவ்வாய், 21 ஜனவரி, 2020



5, 8 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு மையங்கள் மாற்றப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!!

சென்னை: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை என்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும். மேலும் 5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சுலபமான கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் என் அவர் தெரிவித்துள்ளார்.


2019-2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 5 ஆம் வகுப்பு படிக்கும் கிராமபுற மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தும் நிலை உருவாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இதனால் குழந்தை தொழிலாளர்கள் பெருகும் நிலையும் உருவாக வாய்ப்புள்ளது. இந்நிலையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு பயத்தால் தத்தளித்து வருகின்றனர். 


இந்நிலையில், மைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்....... தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம். 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். 


குறைவான மாணவர்கள் இருந்தாலும் பயிலும் பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்கப்படும். பயிலும் பள்ளியிலேயே பொதுத் தேர்வு எழுத வழி ஏற்படுத்தும் வகையில், தேர்வு மையங்கள் மாற்றமில்லை என்ற அரசாணை இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மையங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று விளக்கம் அளித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent