இந்த வலைப்பதிவில் தேடு

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு நடைபெறாது - அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்ததாக தகவல் - முழு விபரம்

திங்கள், 27 ஜனவரி, 2020



5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக வெளியான அறிக்கையை தொடர்ந்து, பாமக தொடர் போராட்டம், 28 ஆம் தேதி, அறிவித்தது.


இது குறித்து அக்கட்சித்தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்பு கொண்டு, போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. 

அப்போது, பொதுத்தேர்வை கைவிடும்படி ராமதாஸ் கேட்டுக் கொண்டதாகவும், அமைச்சரும் அடுத்த ஆண்டு தேர்வு நடைபெறாது என உறுதியளித்ததாக  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் உறுதியை ஏற்று, நாளை நடைபெறவிருந்த, தொடர் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சி தலைவர் ஜி.கே. மணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 





   - தந்தி தொலைக்காட்சி தகவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent